உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

அப்பாத்துரையம் - 37

கொண்டவர் என்பதை அவர்கள் வாய் மொழியால் அறிய விரும்பினான். அவர்கள் தன்பால் காட்டும் அன்பின் அளவிற்கு ஏற்றபடி தன்நாட்டை அவர்களுக்குப் பகுத்துக் கொடுக்க எண்ணினான்.

மூத்தவளை மன்னன் அழைத்துக் கேட்டான், “தந்தையே! உம்மிடம் யான் கொண்ட அன்பை எம்மொழிகளால் எடுத்துரைக்க இயலும்? என் கண்மணியினுஞ் சிறந்த பொருள், என் உயிரினும் உரிமையினும் உயரிய பொருள் நீர்தாம்,” என்று அவள் கூறினாள். இவ்வாறு மேலும் சில பொய்ம்மொழிகளை உரைத்தாள். உண்மையான அன்பு இல்லாதவரே இவ்வாறு பேசுதல் கூடும். அவ்வன்பு இருக்குமானால், உள்ளத்திலிருந்து பிறந்த சில சொற்களே அமையும் அல்லவோ? அவள் வாயினின்றும் வெளிப்பட்ட இம்மொழிகளைக் கேட்ட மன்னன் மகிழ்ந்தான்; மனமார்ந்த அன்போடு அவள் உரைத்ததாக எண்ணிவிட்டான்; தந்தை ஒருவர்க்கு இயற்கையான அன்புமிக்க நிலையில், அவளுக்கும் அவள் கணவனுக்குமாகத் தன் நாட்டில் மூன்றிலொரு பகுதியை அளித்துவிட்டான்.

பின்னர், தன் இரண்டாம் மகளை அழைத்து அவள், கூறுவதைக் கேட்டான். அவள் தன் தமக்கையைப் போன்றவளே; அவளைப் போலவே இல்லாததைப் புனைந்து கூறினாள், “என் தமக்கை செலுத்தும் அன்பைவிட, யான் உம்மிடம் கொண்ட அன்புமிகப் பெரிது; உலகத்தார் புகழும் எதுவும் எனக்கு மகிழ்ச்சி தருவதில்லை; உம்மிடம் என் அருமைத் தந்தையாராகிய உம்மிடம் அன்பு செலுத்துவதிலே தான் எனக்குச் சிறந்த மகிழ்ச்சி உள்ளது,” என்றாள்.

தான் எண்ணியபடியே இவ்வளவு அன்புமிக்க மக்களை உடையவனாக இருக்கும் பேற்றை நினைந்து அவன் களித்தான். ரீகன் கூறிய அழகிய சொற்களைக் கேட்டதும், மூத்தவளுக்குத் தந்ததுபோலவே அவளுக்கும் அவள் கணவனுக்குமாகத் தன் நாட்டில் மூன்றிலொரு பகுதியை அளித்தான்.

ரு

பிறகு, அவன் தன் இளையமகன் கார்டெலியாவை அன்புடன் அழைத்தான். அவன் அவளையே தன் செல்வக் குழந்தையாகப் போற்றிவந்தான்; மற்றவரினும் அவளிடம் மிக்க அன்பு காட்டி வந்தான்; ஆகையால், அவர் இருவரும் உரைத்தவாறே