உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

83

அவனை அசட்டையாகப் பார்த்துத் தன் இறுதி விருப்பங்களை ஸீஸருக்கு உணர்த்து முறையில் அவனிடம் கூறினாள்:

“எனக்கு ஸீஸர் ரிவாதாயின் அதனை என் புதல்வனிடமும், என் காதலன் நண்பரிடமும் காட்டுக!"

“நான் அந்தோணியின் உயிரே உயிராய் அவன் வாழ்வே வாழ்வாய் வாழ்ந்தவள்; அதுபோல் அவன் மாளவே மாள்வாய் மாளத் துணிந்து விட்டேன். ஸீஸர் நாடிய ரோமப் பேரரசையும், ஸீஸர் நாடிய எகிப்தையும் இழப்பதில் எனக்கு வருத்தமில்லை. அந்தோணி இல்லா உலகை ஸீஸர் ஆளட்டும். நான் அந்தோணி யையும் அவன் வாழும் உலகையுமே ஆளப் போகிறேன்.

“காதல் தளையால் கட்டுண்டிருந்த சிங்கத்தைப் பின்பற்றி நான் சொல்லுகிறேன். சிறுமைப்பட்ட சூழ்ச்சி வலையால் உலகைக் கவர்ந்த ஸீஸர் இவ்வெற்றுலகை ஆளட்டும்.”

69

இவ்வாறு பெருமிதத்துடன் கூறிவிட்டு அவள் தன்னிடமே ஒரு சிறு பெட்டியில் கரந்துவைத்திருந்த கொடிய நச்சுப்பம்பு ஒன்றையெடுத்து 'இதுகாறும் பிள்ளைபோல் உன்னை வளர்த்தேன். இப்போது நன்றி மறவாது என் காதற்கனியுடன் என்னைச் சேர்ப்பிப்பாய்' என்று கூறி, அதன் நஞ்சை உடலில் ஏற்றாள். அரை நொடியில் அந்தோணியின் உடலுடன் அவள் உடல் கிடப்ப உயிர் அந்தோணியை நாடிச் சென்றது.

இறுதியில் அக்டேவியஸ் ஸீஸர் வந்து காதலரசனும் காதலரசியுமாய் மாள்விலும் பணியாது வீறுடன் விளங்கிய அத்துணைவரைக் கண்டான். ஒரு நொடி அவன் உலகியல் அறிவுகூடக் கலங்கியது. தமது தந்நலத்தாலும் ரோமின் சீர்குலைவாலும் இதுகாறும் இறந்த ஒப்பற்ற ரோமத் தலைவர்களை எண்ணிப் பார்த்தான். “வீரத்துக்கு இரையாகிய ஜூலியஸ் ஸீஸூரென்ன, ஒழுக்கத்தின் உயர்குன்றாகிய புரூட்ட ஸென்ன, நட்பின் அணிகலமாகிய காஸியென்ன, கடைசியில் காதலின் ஒப்பற்ற சிகரமாகிய இவ்வீர அந்தோணியென்ன, இப்பெருந்தகை ரோம வீரர் அனைவரும் மாண்டனரே! ரோமின் பெருவாழ்வின் ஊற்றுகளான இவர்கள் போனபின்