உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

அப்பாத்துரையம்

11. தெஸிமஸ் புரூட்டஸ்

12. ஸிஸரே: ரோம அரசியல் மன்றத்துப் பெருஞ் சொல்லாளர்.

பெண்டிர்:

1. கல்பூர்ணியா, ஜூலியஸ் ஸீஸரின் மனைவி.

2. போர்ஷியா: புரூட்டஸின் மனைவி; கதோ என்ற உரோம அறிஞரின் மகள்.

கதைச் சுருக்கம்

ரோமின் ஒப்பற்ற வெற்றிவீரனும் படைத்தலைவனுமான ஜூலியஸ்ஸீஸர் பொதுமக்கள் உள்ளங் கவர்ந்த முடிசூடா மன்னனாய் விளங்கினான். அவன் நண்பன் அந்தோணியோ நகர் விழாவின்போது மும்முறை முடியை அவனுக்குப் பொதுமக்கள் சார்பாக அளிக்கவே, பெருமக்கள் பொறாமை கொண்டனர். அவனைக் கொலை செய்யச் சூழ்ச்சி செய்தனர்; அதில் தலைவன் காஸியஸ். நாட்டுப் பற்றும் விடுதலைப் பற்றும் மிக்க புரூட்டஸ் காஸியஸின் தூண்டுதலால் அதன் தலைமைப் பெயர் ஏற்றுக் காஸியஸின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு முட்டுக்கட்டையானான்.

க்

நகர் விழாவின்போது ஆண்டியொருவன் ஸீஸரிடம், “உன் பெருமை யெல்லாம் மார்ச் நடுநாள் என்னாகிறது பார்," என்றான். மார்ச் நடுநாள் அரசியல் மன்றக் கூட்டம், கிளர்ச்சிக்காரர் அவனைக் கொல்லத்திட்டப் படுத்திய நாள் அது. ஸீஸர் தன் மனைவி கல்பூர்ணியா, கனாவையும் பொருட்படுத்தாது சபையில் தன்னை எச்சரிக்க வந்த நண்பர் அர்த்தெமி தோரஸையும் புறக்கணித்துக் கொலையுண்டான். அதன்பின் ஸீஸர் பிணத்தின் முன்னிலையில் பேச அந்தோணியோ இணக்கங்கேட்டான். காஸியஸிற் கெதிராக அதற்குப் புரூட்டஸ் இடங்கொடுக்க, அந்தோணியோ நாத்திறத்தால் மக்களைக் கிளப்பிக் கிளர்ச்சிக் காரரை வெளியே துரத்தினான். இத்துன்பச் செய்தி கேட்டு புரூட்டஸ் மனைவி போர்ஷியா இறந்தாள்.

புரூட்டஸின் நேர்மையால் பணவருவாய் வகையில் அவனுக்கும் புரூட்டஸுக்கும் பூசல் நிகழ்வும், அந்தோணியுடன்