உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

9

சேர்ந்து லெப்பிடஸ் என்பவனும் ஸீஸர்மகன் அக்டேவியஸ் ஸீஸரும் சேர்ந்து அவர்களை எதிர்த்தனர். இதனாலும் போர்ஷியா பிரிந்த செய்தி கேட்டும், புரூட்டஸ் உயர்வைக் கண்டும் காஸியஸ் தன் வாழ்வை அவனிடமே ஒப்படைத்துப் பிலிப்பிப் போரில் மாண்டான். முன்னிரவில் ஸீஸர் ஆவி கண்டு முடிவறிந்த புரூட்டஸும் தன் வாளில் வீழ்ந்திறந்தான். அக்டேவியஸ் கூட அவன் உயர்வறிந்து பெருமைப்படுத்தினான்.