உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

13

காஸியஸ்: இப்படி நாம் செயலற்று அஞ்சிக் கொண்டிருப்பதனாலே தான் ஸீஸர் நமது பொது வாழ்வை அவமதித்து மிதிக்க முடிகிறது. அதனால் இன்று அவர் உலகளந்த பெருமாளாக மண்ணும் விண்ணும் தொட்டு நிற்கிறார். நாமும் அவர் காலடியில் நின்றுகொண்டு அவர் முழந்தாள்களை அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருக்கிறோம். இது யார் குற்றம்? அவரவர் விதிக்கு அவரவர் மதிதான் காரணமேயன்றிப் பிறர் காரணமாவாரோ? அவனும் நாமும் பிறந்தபோது ஒன்றுபோல் மனிதராகத்தாமே பிறந்தோம்? பின் அவனை மனிதனாக நடக்கச் சொன்னவர்களும் இல்லை; நம்மைப் புழுக்களாய் அவன் காலடியிற்கிடந்து நெளியச் சொன்னவர் களும் இல்லை. இதோ பார்! நீதான் இருக்கிறாய்! நீ புரூட்டஸ், அவன் ஸீஸர்! புரூட்டஸுக்கும் ஸீஸருக்கும் என்ன வேற்றுமை? ஆனால் நீ புரூட்டஸாக நடந்துகொண்டால் தானே!

புரூட்டஸ் மனத்தில் இச்சொற்கள் பசுமரத்தில் கூரம்புகள் பாய்வது போற் பாய்ந்து பதிந்தன. அவன் ஒன்றிரண்டு வினாடிகள் செயலற்று நின்று, பின் “சரி காஸியஸ் நீ கூறியதை மறவேன். அதைக் குறித்து மீண்டும் கலந்து ஆராய்வோம். இதோஸீஸரும் அவர் கூட்டத்தாரும் வருகிறார்கள்," என்று கூறினான்.

2. கிளர்ச்சித் திட்டம்

ஸீஸர் திரும்பி வந்தபோது காஸ்கா முன்போல் கூட்டத்தை அடித்துத் துரத்திக் கொண்டு முன்னால் வந்தான். ஸீஸர் அப்போது அந்தோணியின் தோள்கள் மேல் ஓட்டப் பந்தயத் திற்கென ஆடையின்றி அரைக்கச்சையுடன் வரும் இளைஞனாகிய அந்தோணியின் தோள்கள் மேல் கை போட்டுப் பேசிக்கொண்டே வந்தான்.

அச்சமயம் அவனது உடை பேரரசர்க்குரிய கருஞ்சிவப்பு உடை; அவன் கண்பார்வை உலகமெல்லாம் தனதெனப் பார்க்கும் பார்வை.

அவன் வாழ்க்கையின் கோள் உச்சநிலையை அடைந்த நேரம் அது. உலகத்தை ஆளும் ரோம் நகர் அவன் காலடியிற் கிடந்து அவன் ஆணைக்குக் காத்து நின்றது. அந்தோணி அவனுக்குப் பொதுமக்கள் சார்பாக உலகின் மணிமுடியை அளித்தது