உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

அப்பாத்துரையம்

சற்றுமுன்தான். அதனை அவன் மேற்போக்காக மறுத்தும் அது பேராரவாரத்தினிடையே மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அவனுக்கு அளிக்கப்பட்டது. அவன் இனி அதை அடைவது உறுதி. அடைவது என்று என்பது தெளிவாக வேண்டியது ஒன்றுதான் குறை. அதுவும் பெரும்பாலும் அவ்வாண்டின் மார்ச்சுத் திங்கள் நடுநாள் (மார்ச்சு ஐந்தாம் நாள்) கூடவிருக்கும் அரசியல் மன்ற2க் கூட்டத்தில் வைத்து நிறைவேறக்கூடுமென்று அவன் நண்பர்கள் கூறிக்கொண்டார்கள்.

ஆனால் ஊழின் போக்கை யாரே மதிப்பிட்டறியக் கூடும்? அவன் வாழ்க்கையின் வெள்ளி உச்சநிலையை அடைந்த அதே நேரத்திலேதான் அதன் தூமகேதுவும் வானில் எழுந்தது என்னல்வேண்டும்!

பெருமக்களும் மன்னரும் அவனை அணுக அஞ்சிய அந்த நேரத்தில், ஆண்டி ஒருவன் எப்படியோ எல்லோரையுங் கடந்துவந்து அவன் முன் நின்றான். முதற் பெரும் பூதங்கள்கூடக் கேட்க அஞ்சிய அவனது பெயரை அவ்வாண்டி கூசாது உரக்கக் கூறுகிறான்! ‘ஸீஸர், ஏ ஜூலியஸ் ஸீஸர் என்ன அடம்!!

அவன் உடல் ஒடுங்கியிருப்பினும் இருப்புலக்கை போல் உறுதியுடையதாய் இருந்தது. அவன் உடுத்தியிருந்த உடை தாறுமாறாகக் கிழிந்த அழுக்குக் கந்தைகளேயாயினும் அவை காற்றிலசைந்து அவன் உரமிக்க உடலை வெளிப்படுத்தும் போது, அவை அவன் உடல் வலியை எடுத்துக் காட்டும் வீரக் கச்சையோ என்னும் படி விளங்கியிருந்தன.

அவன் அச்சமற்றுத் துணிகரமான குரலில், “ஸீஸர், ஏ ஜூலியஸ், ஸீஸர்! உன் பெருமையெல்லாம் 3மார்ச்சு நடுநாள் என்னாகிறது பார்” என்று அதட்டிக் கூறி மறைந்தான். அவன் போய்ச் சிறிது நேரம் வரையில் ஒருவருக்கும் தன் உணர்வு வரவில்லை. ஸீஸரது பெருமிதமும் அவனைச் சுற்றி வந்தவரது களிப்பும் மீளுதற்கின்றி மறைந்தோடின. அவர்களனைவரும் சூனியக்காரியின் பின் செல்லும் பேயுருக்கள் போல ஸீஸரைப் பின்பற்றிச் சென்றனர்.

ஸீஸருடன் வந்த அவன் மனைவி கல்பூர்ணியாவோ ஒந்தியைக் கண்ட மயிலென நடுங்கிக் கணவன் தோள்களைப்