உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்பதைக் கதைகள்

66

91

என் தாய் நான் இல்லாமல் எவ்வளவு துன்பம் அடைந்திருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். ஆயினும் நான் எங்கிருந்தாலும் நல்வாழ்வு வாழ்வது எண்ணித்தான் உயிருடன் இருக்கிறாள். அதேசமயம் இது தெரியாத என் தந்தைக்குத் தாய்மீது புதிய சீற்றத்துக்கு இடமில்லாமல் போயிற்று. அத்துடன் நீங்கள் கூறுவதிலிருந்தே என் மறை திட்டம் இன்னும் மறைவாகவே இருக்கிறது என்றும், என் தந்தை மனமாற்றம் அடைந்து விட்டார் என்றும் அறிகிறேன். ஆகவே இனி நான் தாய் துயர் முற்றிலும் அகற்றித் தந்தை மயக்கமும் மாற்றிவிட வேண்டும். உங்களுடனேயே நாளை எங்கள் குழந்தைகளுடன் நாங்கள் அங்கே செல்வோம்" என்றாள்.

கடைக்காரனும் ஊர்மக்களும் கூட அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஆனால் வாரியூரில் பாடுமாங் குயிலும் பண்ணன் பாடிலியும் அடைந்த புது மலர்ச்சி இதனினும் பெரிது. பாடுமாங்குயில் சின்னஞ்சிறு பாடுமாங்குயிலையும், பண்ணன் பாடிலி சின்னஞ் சிறு ஆடலழகனையும் தணியாத ஆர்வத்துடன் எடுத்து வைத்து மகிழ்ந்தனர்.

ரு

அன்பரசிக்கு மற்றும் மூன்று செல்வர்கள், இரு ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தனர். ஆண் செல்வங்களுக்குப் பண்ணன் சேந்தன், பண்ணன் பாடிலி என்றும், பெண்செல்வத்துக்குத் தையல் நாயகம் என்றும் பெயரிட்டு வளர்த்தனர்.

பண்ணன் சேந்தனும் தையல்நாயகமும் தங்கள் உயர் ஆரவார அவாவால் நேர்ந்த தீங்குகளை எண்ணி மனமாறி, புதுமரபுச் செல்வங்களைக் கண்டு மகிழ்ந்தனர்.