உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. பண்பார்ந்த செல்வி

காந்தளூரெங்கும் ஒரே பரபரப்பு. பழந்தீவு சென்று குடியேற விரும்பும் பரதவர் ஒவ்வொருவருக்கும் அங்கே பத்துக் காணி புது நிலம் இலவசமாக அளிக்கப்படும் என்ற அரச விளம்பரம் எங்கும் முரசறையப்பட்டிருந்தது. புது நிலத்துக்குப் பத்து ஆண்டுகள் வரி கிடையாது. அதன் மேல் ஐம்பதாண்டுகளுக்குப் பாதிவரி தள்ளிக் கொடுக்கப்பட்டது. ஊர்க் கோடியிலிருந்த கடற்படை அரங்கத்தில் பலர் வரிசை வரிசையாக நின்று, தம் பெயரைக் குடியேறுபவர் பட்டியலில் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

பெயரைஆர்வத்துடன் பதிவு செய்து கொண்டவர்களில் பைஞ்ஞீலி என்ற ஓர் இளம் பெண்ணும், பொன்னாவிரை என்ற ஓர் இளைஞனும் இருந்தனர். இருவருமே தாய் தந்தையற்றவர். நெருங்கிய உறவும் பாசநேசமும் உடையவர். ஆகவே இருவரும் ஒருங்கே பழந்தீவுக்குக் கலமேற விரும்பினர். ஆனால், பைஞ்ஞீலியைப் பாதுகாத்து வந்த முதுகணாளர் அவள் அம்மானான வாரியர் வள்ளத்தோள். அவர் புதிய சோழர் கடற்படையிலும் பதவி வகித்தவர். ஆகவே அவளுக்கு அவர் கலத்தில் எளிதில் ஓர் இடம் பெற்றுத் தந்தார். ஆயினும் பொன்னாவிரை அவளுடன் போவதை அவர் விரும்பவில்லை. ஆகவே அவனுக்கு இடம் பெற்றுத்தர மறுத்தார். பயண நேரத்தில் இது இருவர் மகிழ்ச்சியையுமே குலைத்தது. ஏனெனில் நங்கை கலமேறிப் பழந்தீவிலும், நம்பி கலமேறாமல் இப்பால் தமிழகத்திலும் தங்கவேண்டியதாயிற்று.

பைஞ்ஞீலிக்கு அப்போது வயது பதினான்கு. அவள் பெயருக்கேற்றபடி அவள் தோள்களிலும் முதுகிலும் அலையலையாகச் சுருண்டு புரண்ட தலைமுடி ஒரே பசுநீல நிறமாய் இருந்தது. விழிகளும் அதே நிறமாய்ப் பைங்குவளை மலர்கள்போல் விளங்கின. அவள் முகமோ பாலாடையில்