உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அப்பாத்துரையம் - 39

செழுமையும் வளமும் பரப்பச் சோழர் எவ்வளவோ முயன்றும் விரைந்த பயன் எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் சோழர் ஆட்சி அச்சமயம் நாடுநாடாக எல்லையற்றுப் பரந்துக்கொண்டே யிருந்தது. போரில் செலுத்திய அதே அளவு கவனத்தைச் சோழர்கள் மக்கள் வாழ்வில், சிறப்பாகச் சேரநாட்டு மக்கள் வாழ்வில், செலுத்த முடியவில்லை. இந்நிலையில் பொன்னா விரையின் உழைப்பு அவன் உடலைத் தான் உருக்குலைத்ததே தவிர, அவன் கையிருப்பை ஒரு சிறிதும் பெருக்க முடியவில்லை. ஒரு மாத உழைப்பின்பின் அவன் பாயும் படுக்கையுமாகக் கிடக்கவேண்டியதாயிற்று. பைஞ்ஞீலிக்கு வழக்கமாக எழுதும் கடிதங்களைக்கூட அவனால் எழுத முடியவில்லை.பிறர் மூலமாக அவன் நிலையறிந்த பைஞ்ஞீலி பாகாய் உருகினாள்; கண்ணீர் வடித்தாள். அவளும் தன்னாலியன்ற மட்டும் கடுமையாகவே உழைத்தாள். ஒரு தனி இளம் பெண் நான்கு ஆண்களின் வேலையைச் செய்வது கண்டு, அயலாரும் உறவினரும் அவளுக்குத் தம்மாலியன்ற உதவிகள் யாவும் செய்தனர். ஆனால் புதுக்குடியிருப்புக்களில் அவரவர் முழு உழைப்பும் அவரவர் வாழ்க்கைக்குத் தேவையாயிருந்தது. பைஞ்ஞீலியாலும்

பெருந்தொகை மிச்சப்படுத்த முடியவில்லை.

அவளைச் சென்றடையும் நம்பிக்கை இழந்தவனாய் பொன்னாவிரை இங்கே துடித்துக் கொண்டிருந்தான். அவனை வரவழைக்கும் வகை காணாமல் அவனையே எண்ணி எண்ணிப் பைஞ்ஞீலி அங்கே இரவும் பகலும் கண்ணீர் பெருக்கிக் கொண்டே இருந்தாள்.

பகலின் உழைப்பால் பைஞ்ஞீலி இரவில் ஒரு சில மணி நேரமாவது அயர்ந்து உறங்குவதுண்டு. பொன்னாவிரையைப் பற்றிய எண்ணங்கள் அச்சமயங்களில் இனிய கனவுகளாக அவளைத் தாலாட்டும். எழுந்தபோது அவள் அடையும் ஏமாற்றம் காண்பவருக்குத் துயரம் தருவதாயிருந்தது. ஆயினும் எப்படியோ இக்கனவுகளே அவளுக்கு ஒரு சிறிதாவது தெம்பும் புதிய ஊக்கமும் தராமல் இருப்பதில்லை. ஒருநாள் இத்தகைய ன்பக் கனவிடையே, நள்ளிரவில் அவள் கதவு தடதடவென்று தட்டப்பட்டது.