உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்பதைக் கதைகள்

95

அவள் தூக்கம் முழுவதும் கலையவில்லை. அரைத் துயிலுடனேயே அவள் எழுந்து கதவைத் திறந்தாள். அவள்முன் நடு வயது கடந்த ஒரு முரட்டு வீரன் நின்றான். சற்றுக் கூர்ந்து நோக்கிய பின் அவளுக்கு ஒரு சிறிதே அவன் அடையாளம் தெரிந்தது. அவன் பெயர் சிலம்பன். தாயகத்திலிருந்து அவள் வந்த கலத்தில் அவளுடனேயே வந்தவன் அவன். புது நிலத்தில் இறங்கிய மறுநாளே அவனை அவள் காணவில்லை. இது காரணமாகச் சில நாள் அவன் பெயர் அக்குடியிருப்பில் அடிபட்டிருந்தது. அவள் அவனை நினைவில் வைத்துக் கொண்டிருக்க உதவிய செய்தியும் இதுவே.

66

"ஆ, நீயா? இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய்? எப்படி இந்த நேரத்தில் வர நேர்ந்தது?” என்றாள்.

"பேச எவ்வளவோ இருக்கிறது. ஆனால் முதலில் வயிற்றுக்கு ஏதாவது கொடு. சிறிது உண்டு இளைப்பாறிவிட்டுப் பேசுகிறேன்” என்றான் சிலம்பன்.

அவள் சட்டென எழுந்து அவனுக்கு வயிறாரப் பழங்கஞ்சி வார்த்தாள். அத்துடன் சிறிது அப்பமும் கிழங்கு வகைகளும் அளித்தாள். ‘குறை இரவும் தூங்கி எழுந்த பின் காலையிலேயே எல்லாம் பேசிக் கொள்ளலாம்' என்றாள்.

அவன் இணங்கவில்லை.

66

"அம்மணி! எனக்கு உண்மையில் பேசக்கூட நேரமில்லை. உன் வரலாறு முழுவதும் எனக்குத் தெரியும். உன் தங்கமான குணத்தையும் நான் அறிவேன். இல்லாவிட்டால் இந்த வேளையில் உன் நன்மையை நாடி இவ்வளவு தொலை வந்திருக்கமாட்டேன். இப்போதே நான் சொல்ல வந்த முக்கியச் செய்தியைக் கூறிவிட்டு விடியுமுன்பே நான் போய்விட வேண்டும்” என்றான்.

அவள் அப்படியே அவனைப் பேச விட்டாள்.

“அம்மணி! இந்தத் தீவின் பெயர் பழந் தீவு பன்னீராயிரம் என்பதை நீங்கள் அறியலாமே! சோழர் இந்தத் தீவுகளை ஒவ்வொன்றாகப் பிடித்தடக்கப் பல ஆண்டுகள் ஆயின. ஆனால் இந்தத் தீவிலேயே சோழரால் கண்டுபிடிக்கப்படாமலும், நம்