96
அப்பாத்துரையம் - 39
பழஞ் சேரரால்கூடக் கவனிக்கப்படாமலும் ஒரு பெரும்பகுதி இருக்கிறது. அதை இவ்வளவு நாளும் யவன வணிகர் தங்கள் வாணிகத் தளமாகக் கொண்டு மறைந்து வாழ்ந்தனர். இப்போது அவர்கள் கடற் படைகளைச் சோழர் கடற்படை தாக்கி அழித்துவிட்டது. அவர்கள் கிடைத்த பொருள்களைச் சுருட்டிக் கொண்டு தங்கள் தாயகத்துக்கு ஓடிவிட்டனர். சோழ வீரர் கடற் கரையிலேயே இருப்பதால், உள்நாட்டுப் பகுதியில் இன்னும் எண்ணற்ற ஆடுமாடுகள், செல்வங்கள் குவிந்து கிடக்கின்றன. அங்கே செல்பவருக்கு ஏழு தலைமுறைகளுக்கு வேண்டிய வாழ்க்கை வாய்ப்புக்கள் எளிதில் கிடைக்கும். இதை எல்லாருக்கும் சொல்லிப் போகத்தான் வந்தேன். மற்றவர்களுக் கெல்லாம் விடிந்துதான் கூறப் போகிறேன். உன் நல்ல குணத்தை நினைத்து ஒரு நாள் முந்தியே உனக்கு நான் இதைக் கூற எண்ணினேன்” என்றான் அவன்.
அவள் அவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்தாள். ஆனால் இதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்று அவளுக்கு இன்னும் புரியவில்லை.
"ஐயா! உம் அன்பு பெரிது. ஆனால் நான் துணையற்ற இளம்பெண். முன்கூட்டித் தெரிந்தாலும் இரவில் நான் எங்கே செல்ல முடியும்? எப்படித் தனியே செல்ல முடியும்? நீங்களோ மற்ற ஊர் நண்பர்களோகூட வருவதாய் இருந்தால் தானே..."
66
"அது பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். அம்மணி, நான் எல்லாருக்கும் நேரே சொல்லக் கூட நேரம் இல்லை. அவர்கள் வேலை செய்யும் இடத்தில் எழுதி வைக்கப்போகிறேன். அவர்கள் அதைப் பார்த்துவிட்டு நாளை இரவோ மறுநாளோ தான் புறப்பட முடியும். அவர்களுக்கு வழியும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் உங்கள் வேலை எளிது. நான் வரும் வழியெல்லாம் கடப்ப மரங்களில் மேல் பட்டையை உரித்துச் சுண்ணம் பூசி வந்திருக்கிறேன். இரவின் இருட்டிலேயே அவை வழி காட்டும். வழி சிக்கலானதுதான். ஒரு மலை ஏறி இறங்கியாக வேண்டும். அது கடந்தபின் இருபுறமும் கடல் அலை பாயும் ஒரு நீண்ட நில இடுக்கைக் கடந்து சென்றாக வேண்டும். ஆனால் இவை கட வை கடந்தால் உங்களுக்கு எவ்வளவோ பயனுண்டு. மாடு கன்றுகள், தானிய வகைகள் மட்டுமல்ல; ஆடையணி