134
அப்பாத்துரையம் - 39
கோட்டையின் இடிந்த மதிலருகே ஒரு புழைவாயில் தெரிந்தது. அது ஒரு சுரங்கத்தின் வாய். ஆனால் உள்ளே பட்டப்பகலில்கூட எல்லாம் கருக்கிருட்டாய் இருந்தது. அதில் நுழைந்து பார்த்தல் நலம் என்று முத்துக் குடும்பன் கருத்துரை கூறினான். ஆனால் விளக்கில்லாமல் எப்படி உள்ளே செல்வது?
இச்சமயம் நீலகண்டன் மணிவண்ணனை நோக்கினான். அவன் புகை குடிப்பது வழக்கம். ஆகவே அவனிடம் எப்போதும் நெருப்புப் பெட்டி இருந்தது. நீலகண்டன் குறிப்பை அறிந்துகொண்டான். "ஊம். நான் குச்சி பற்ற வைக்கிறேன். ஆனால் குச்சி பற்றவைப்பவனுக்குக் கண் முன்னால் ஒன்றும் தெரியாது.நீதான் நுழைந்து உள்ளே பார்க்க வேண்டும்” என்று அவன் கூறினான்.
நீலகண்டன் இதை ஒத்துக்கொண்டான்.
மணிவண்ணன் ஒவ்வொரு குச்சியாகப் பொருத்திக் கொண்டே சென்றான். அவனையடுத்து நீலகண்டன் சென்றான். பின்னால் பாரத வீரனும் மற்றக் குழுவினரும் காலால் தட்டித் தடவிக்கொண்டு முன்னேறினார்கள்.
திடீரென்று நீலகண்டன் பேய் கண்டவன்போல் அலறினான். மணிவண்ணனும் அவனும் ஒருவர்மேல் ஒருவர் புரண்டடித்துக்கொண்டு வெளியேறினர். செய்தி இன்னது என்று அறியாமலே, மற்றவர்களும் உயிருக்கஞ்சி உருண்டோடி வந்தனர். வெளியே வந்து ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தார்கள். 'என்ன அங்கே? என்ன அங்கே?' என்று ஒருவரை ஒருவர் கேட்டனர்.
யாரும் விடை கூறவில்லை. கூறமுடியவுமில்லை. சிறிது மூச்சு வந்தபின் நீலகண்டன் மட்டும் ஏதேதோ உளறினான். ‘அங்கே கண்டதா? தலையில்லா மனிதன் அப்பா, தலையில்லா மனிதன்! அந்தரத்தில் தொங்குகிறான்" என்றான் அவன்.
66
மணிவண்ணன் உடல் இன்னும் வெடவெடத்தது. “இந்த நாடகம் இத்துடன் போதும், அண்ணமாரே! பாரத வீரனிடம் எல்லாம் சொல்லி மன்னிப்புக் கேட்டு விடுவோம். எல்லாம் முன்போலவே இருக்கட்டும்” என்றான்.
மாவிதுரன் பல்லைக் கடித்தான். அவனைக் கடுமையாகப்
பார்த்தான்.