மருதூர் மாணிக்கம்
135
பாரதவீரன் பேச்சு வந்ததுமே, முத்துக்குடும்பன் சுற்றிப் பார்த்தான். எல்லாரும் இருந்தார்கள்; பாரத வீரன் மட்டும் இல்லை. “எங்கே பாரத வீரன்!” என்று அவன் கலவரத்துடன் கேட்டான்.
எல்லாரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்து மிரள மிரள விழித்தார்கள். திருப்பிச் சுரங்கத்தில் சென்று பார்க்கும் துணிவு எவருக்கும் இல்லை. ஆனால் இச்சமயம் சுரங்கத்துக்குள்ளே யிருந்து, பாரத வீரன் குரலே கேட்டது. அது யாவும் விளக்கிற்று.
மற்றவர்கள் ஓடியபோது, பாரதவீரன் ஓடவில்லை. மற்றவர்களுக்கு அச்சந்தந்த செய்தியே அவன் வீரத்தைத் தட்டி எழுப்பிற்று அவன் நின்றபடியே நின்றான். அவன் கையிலுள்ள வாள் அந்தச் சுரங்கம் இடங்கொள்ளுமட்டும் வலசாரி இடசாரியாக அவன் தலையைச் சுற்றிச் சுழன்றது. “யார் அங்கே சுரங்கத்துக்குள்? அது மனிதரானாலும் சரி, பேயானாலும் சரி! கண்கண்ட கற்கி முன் வந்து பார்க்கட்டும்!” என்று சுரங்கமதிர அவன் கத்தினான்.
யாரும் வரவில்லை. இருட்டில் எதுவும் தெரியவும் இல்லை. எல்லாம் ‘கம்’மென்றிருந்தது.
பாரதவீரன் குரல் கேட்ட தோழர்கள் மீண்டும் உள்ளே நுழைய விரும்பினர். மணிவண்ணனைப் பார்த்தனர். அவன் ஒரு குச்சியை எடுத்துப் பொருத்தினான். அதேசமயம் பாதி எரிந்து அருகில் கிடந்த ஒரு சூந்துக்கட்டை நீலகண்டன் எடுத்தான். தீக்குச்சியின் பக்கம் அதை நீட்டினான். அது 'தக தக' வென்று பந்தமாக எரிந்தது. அணைந்து கங்கானபின் அது பின்னும் பேரொளி விளக்கம் தந்தது. அதன் உதவியால் அவர்கள் எளிதில் சுரங்கத்துக்குள்ளே சென்றனர்.
அந்த ஒளியில் எல்லாம் பட்டப்பகலாய்த் தெரிந்தது.பாரத வீரன் வாளை இன்னும் சுழற்றிக் கொண்டுதான் நின்றான். கண்காணா எதிரியை அவன் இன்னும் போருக்கு அழைத்துக் கொண்டுதான் இருந்தான். பந்தத்துடன் வரும் தோழர்களை அவன் புன்முறுவலுடன் வரவேற்றான். வாருங்கள், தோழர்களே! உள்ளே போகலாம். அங்கே இருப்பது மனிதனாயிருக்கலாம், பேயாய் இருக்கலாம். ஆனால் அது ஒரு
66