உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




138

66

அப்பாத்துரையம் - 39

'அத்துடன் விசயாதி விசயனான பாரத வீரனின் தேர் விசயனின் தேரை ஒத்ததாயிருக்க வேண்டும். விசயன் தேரைப் போல அதை நான்கு குதிரைகள் இழுத்துச் செல்ல வேண்டும். குதிரைகள், பால் வெள்ளைக் குதிரைகளாய் இருந்தால், இன்னும் சிறப்பு. உலாவில் அவன் ஏறிச்செல்லும் ஊர்தியும் வெறும் குதிரையாகவோ, கழுதையாகவோ இருக்கக்கூடாது. அது விக்ரமாதித்தன் ஏறிச்சென்றது போல, ஒரு வேதாளமாயிருக்க வேண்டும்.

"இந்த இரண்டு வகைக்கும் நான் ஒரு நல்ல ஏற்பாடு செய்ய எண்ணுகிறேன். பாரத வீரனுக்கும் உங்களுக்கும் அது பிடிக்குமென்று கருதுகிறேன்.

"நாலு குதிரைகள் கண்டுபிடிப்பது எளிதன்று. பால் வெள்ளைக் குதிரைகள் இன்னும் அரிது. கிடைத்த குதிரைகளை வெள்ளையாக்குவதை விட, கழுதைகளை வெள்ளையாக்குவது எளிது. கழுதையின் மூக்கு வெள்ளையானதே! உடலும் கிட்டத்தட்ட வெள்ளைதான். தவிர அது உண்மையில் குதிரை இனத்தையே சேர்ந்தது. பால் நிற நெய் வண்ணம் தீட்டினால், குதிரையின் தோற்றத்தை அது தோற்கடிக்கும். குதிரையை விடக் குறைந்த செலவில், அது குதிரையைக் காட்டிலும் மிகுதியாக உழைக்கவும் செய்யும்.

"தேருக்கு ஏற்கெனவே தெய்வமாக நமக்கு ஒரு கழுதையை அனுப்பியுள்ளது. அது போல மூன்றை விலைக்கு வாங்கு வதனால்கூட மிகுதி விலை பிடிக்கமாட்டாது.

"தவிர, வேதாளத்துக்குக் குதிரையைவிடக் கழுதைதான் பொருத்தமானது. கழுதை இனமும் குதிரை இனமும் இணைந்த இனம்தான் கோவேறு கழுதை. அது இன்னும் பொருத்தமானது என்று நான் உங்களுக்குக் கூறவேண்டியதில்லை. ஏனென்றால் ஏற்கெனவே ஒரு தெய்வத்தன்மை அல்லது பேய்த்தன்மை அதனிடம் இருக்கிறது. அது ஆணுமல்ல பெண்ணுமல்ல. குட்டி போடாது. குடும்பவாழ்வும் நாடாது. வேதாளமாக அதையே பயன்படுத்தலாம் என்று கருதுகிறேன். நம் ஊருக்கு வந்துள்ள நாடோடி நாடகக் குழுவிடம் அத்தகைய விலங்கு ஒன்று இருக்கிறது. நாடகக்குழு நொடித்துப்போனபின், அது ஊர்