உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

139

சுற்றியாகவே திரிகிறது. அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். என்றான்.

""

இந்த அரிய திட்டம் கேட்டு அனைவரும் அகமகிழ்வுடன் ஆர்ப்பரித்தனர்.

முத்துக்குடும்பன் ஒரு திருத்தம் கூறினான்.

“இந்தத் தேரை இழுக்க ஒரு கழுதையே போதுமான தென்று கண்டோம். ஆகவே நாலு கழுதைகளைத் தேடி உருமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். ஒன்றை மாற்றினால் போதும். மற்ற மூன்றும் குதிரைகளாகவே இருக்கலாம். ஆனால் உயிருள்ள குதிரைகள் தேவையில்லை. அட்டைக் குதிரைகள் செய்தால் போதும். வெள்ளைத்தாள் அட்டையாலேயே செய்துவிட்டால், வெண்மை தீட்ட வேண்டாம்.

"இதனால் நான்கு குதிரைகளில் மூன்று உண்மையிலேயே குதிரைகளாய் இருக்கும். ஒன்று குதிரைபோல் இருக்கும். ஆனால் மற்ற மூன்று குதிரையின் உயிரும் அந்த ஒன்றிலேயே அமைந்திருக்கும். அந்த ஒன்றின் உடலுடன் உடலாக மற்ற மூன்று குதிரை உடல்களும் இயங்கும்."

மணி

முத்துக்குடும்பன் அறிவார்ந்த நகைச்சுவை, வண்ணனை மண்ணில் உருட்டிற்று. மற்றவர்கள் நிலைமையைக் கேட்கவேண்டியதில்லை. முன் இழந்துவிட்ட குழுத் தலைமையை அவன் மீண்டும் பெற்றான். அந்த எக்களிப்புடன், விட்ட இடத்திலிருந்து அவன் மீண்டும் தொடர்ந்தான்.

"கோவேறு கழுதையையும் நாம் முற்றிலும் வேதாளம் ஆக்கிவிடலாம். நாடகத்தில் விக்ரமாதித்தனின் வேதாளமாக நாம் அட்டைசெய்து வைத்திருந்தோமல்லவா? அதன் முகப்பைக் கோவேறு கழுதையின் முகப்பாகவும் பின் பகுதியை அதன் பின் பகுதியாகவும் ஒட்டி விடலாம். நடுவில் பாரத வீரன் உட்கார இடம் இருக்கும். அட்டைகளிடையே வாள் ஈட்டி முதலியவை வைத்துக்கொள்ளவும் வாய்ப்பாயிருக்கும்."

பாரத வீரனுக்குக் கிளர்ச்சி பொறுக்கவில்லை. அவன் முத்துகுடும்பன் முதுகில் ஓங்கி அறைந்தான். முத்துக்குடும்பன் 'கூகூ' என்று கத்தினான். “அந்த வேதாளத்துக்கு இந்த வேதாளம்