மருதூர் மாணிக்கம்
163
சிறிதுநேரம் வீரனும் பாங்கனும் கலந்து சேமநலங்கள் விசாரித்துக் கொண்டார்கள். அதேசமயம் சீடகோடிகளும் கலந்து உறவாடினார்கள். அதன்பின் பாரத வீரன் தன் பாங்கனுக்குரிய தகுதிகள், பொறுப்புக்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசினான்.
66
உண்மை, பொறுமை, பணிவு, சுறுசுறுப்பு ஆகிய பண்புகள் பாங்கனிடம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும் என்று கூறத் தேவையில்லை.”
பார்த் வீரன் பேச்சுக்கிடையே
இடையிட்டும் பேசினான்.
தப்பிலியப்பன்
"பேரரசராகப்போகும் இளவரசே! மற்ற பண்புகளை நான் பேணத் தடையில்லை. வீரத்தை மட்டும் தங்களிடமே விட்டு விடுகிறேன். அது எனக்கு ஒத்துவராது.”
“என்ன அப்படி சொல்கிறாய், பாங்கனே! வீரனுக்கேற்ற பாங்கன் வீரப்பாங்கனாய் இருக்கவேண்டாமா?"
"மன்னிக்க வேண்டும், வீரத்தலைவரே! ஆணுக்கேற்ற பெண் ஆணாயிருத்தல் வேண்டாம். ஆண்மையின் எதிர் பண்பே பெண்மை. அதைத்தான் ஆண்மை விரும்பமுடியும். வீரத்துக்கு எதிர் பண்பு பணிவு, பொறுமை அவற்றின் மூலமே உங்கள் வீரம் சிறக்கும்!”
பாங்கன் எதிர்மொழித் திறம் கண்டு, சீடகோடிகள் ஆரவாரம் செய்தனர். “ஆகா, ஆகா! பாங்கன் அறிவே அறிவு! வாழ்க பாரத வீரன் கொற்றம்! வெல்க பாங்கன் அறிவே அறிவு! வாழ்க பாரத வீரன் கொற்றம்! வெல்க பாங்கன் தப்பிலியப்பன் தனிப்பெரும் பணிவு!” இத்தகைய கூக்குரல்கள் அலையலையாக எழுந்தன.
பாரத வீரன் முகத்தில் தெய்வீகப் புன்முறுவல் சுழியிட்டது. சந்தடி அடங்கியதும் அவன் மீண்டும் பேசத் தொடங்கினான்.
"பாங்கரே! உம் அறிவுத் திறம் பெரிது. மெச்சினேன். ஆனால் வீரர் வீரருடன் தான் போராடுவர். பாங்கர் பாமர மக்கள் எதிர்ப்பை வீரப்பாங்கன்தான் சமாளிக்க வேண்டி வரும்."