உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




164

66

அப்பாத்துரையம் - 39

அதை என்னிடம் விட்டுவிடுங்கள் ஆண்டே! வீரமில்லாதவரிடம் எப்படி வேறு திறமைகளைக் கையாள்வது என்பதை நான் அறிவேன்.”

திருக்கூட்டம் முழுவதும் பாங்கருக்கு இன்னும் உரத்த வரவேற்பளித்தது. பாரத வீரன் முகம் சற்றே சுளித்தது. ஆனால் இது விரைவில் மறைந்தது. அவன் கனிவுடன் பாங்கனைப் பார்த்தான்.சீடகோடிகளையும் சுற்றி நோக்கினான்.

"அன்பர்களே, பாரத வீரனுக்கு இந்தப் பாங்கன் சரியான இணைப்பு என்பதை நீங்களே கண்டுகொண்டீர்கள். எனவே அவனை நாம் பாங்கனாக ஏற்றோம். பாரத வீரன் என்ற நம் பெயருக்கு ஏற்ப, இனி நாம் அவனைப் பட்டி மந்திரி என்றே அழைப்போம். அதுவே இனி அவன் விருதுப்பெயராவ தாக!” என்றான்.

"வாழ்க பாரத வீரன்! வெல்க பட்டிமந்திரி!" என்ற இரட்டை வாழ்த்தொலிகளைச் சீடர்கள் முழக்கினார்கள்.

பாரத வீரன் கையுயர்த்தினான். நிமிர்ந்து உட்கார்ந்தான். “வெல்க பாரத வீரன், வாழ்க பட்டி மந்திரி” என்று மாற்றிக் கூறுங்கள்” என்றான்.

பட்டி மந்திரியே தொடங்கினான், “வெல்க பாரதவீரன், வாழ்க பட்டி மந்திரி” என்று! சீடகோடிகள் அவனைப் பின்பற்றினார்கள். அந்தக் கூச்சல் நகர மாந்தர் காதுகளை எல்லாம் துளைத்தது.

பட்டிமந்திரி தன் காரியத் திறமையைத் தொடக்கத்திலேயே காட்டினான்.

66

'ஆண்டே! எனக்கு இச்சிறிய பதவியைக் கொடுக்கத் திருவுளம் பற்றினீர்கள். அதற்கு மகிழ்கிறேன். எனக்குப் புதுப்பட்டம் தந்து பெருமைப் படுத்தினீர்கள். அதற்கு என் நன்றி. பதவிக்குரிய தகுதி கூறிவிட்டீர்கள். அந்தத் தகுதி எனக்கு உண்டு என்றும் தெரிவித்தீர்கள். ஆனால் இதற்குரிய ஊதியம் இவ்வளவு என்றும் வரையறுக்க வேண்டுகிறேன்” என்றான்.

66

ஊதியமா?” என்ற வியப்புக் குரல் பல சீடர்களிடமிருந்து எழுந்தது. அவர்கள் எல்லாவற்றையும் நாடகமாகவே வகுத்தனர்.