உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

//---

அப்பாத்துரையம் - 39

தமிழ்மொழி வழக்கைப் பாருங்கள்! போற்றத்தக்க பொருள்களைப் பொன்னைப்போல் போற்றுக என்றனர் தமிழர். என்றும் மாறா விலையுடைய பொருள்களுள் யானை ஒன்று. அதனைக் குறிக்க அவர்கள் “யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்” என்றனர். தாய் தந்தையர் தம் உயிரினும் உயர்வாகக் கருதும் மக்களைப் பொன்னே, பொன் மணியே எனப் புனைந்து கூறி மகிழ்வர்; மற்றும் அவர்களைப் பொன்னாகவே கருதித் தாமும் பிறரும் அவர்களைப் பொன்னன் என்றும், பொன்னி என்றும், தங்கமணி என்றும் தங்கம்மை என்றும் பலவாறாக அழைப்பர். காதலிளைஞரும் காதலியரின் அருமையைக் குறிக்கும்போது பொன்னினும் உயர்ந்த பொருளைக் கருதமுடிவதில்லை. பலபடக் கூறுவானேன்? நிலவொளியிள் அழகைப் பொன் நிலவு என்றே குறிக்கின்றனர் கவிஞர். வாணிப உலகின் தொடர்பற்ற கவிஞரே இவ்வளவு தொலைவு பொன்னில் மயங்கினால், வாணிப உலகிலும் உலகியல் வாழ்விலும் ஈடுபட்ட பிறர் மயங்குவதில் என்ன வியப்பு?

உலகியல் கடந்த தெய்வம் ஒன்று உண்டோ இல்லையோ, உலகியலுக் குள்ளாக ஒரு தெய்வம் உண்டெனில், அது பொன்தான். அப்பொன் தெய்வத்தின் ஆற்றலே ஆற்றல்! அதன் சூழலுட்பட்ட மக்கள் அதில் சிக்கித் தம்மை மறக்கின்றனர்; தம் உறவை மறக்கின்றனர். உலகைக்கூட மறந்து அதனையே உலகாகவும் இறைவனைக்கூட மறந்து அதனையே இறை வனாகவும் கொள்கின்றனர். மற்றும் பொன்னைப் பெற்றவர் ஒருபுறம் அதன் பிடியுட்பட்டு வாழ்க்கையைத் துரும்பென மதிக்கின்றனர். இன்னொரு புறம் அதனைப் பெறாதவர் அதனைப் பெறும்வண்ணம் தம் வாழ்நாள் முற்றும் உழைக்கின்றனர். அதற்காக எம்முயற்சியும் செய்ய அவர்கள் தயங்குவதில்லை. அவர்கள் அதற்காகவே வாழ்ந்து அதிலேயே உயிர்விடுகின்றனர். பலர் இம்முயற்சியில் உயிரினும் அரிய தம் மதிப்பினையும் ஒழுங்கை யுங்கூட விட்டுக்கொடுக்க முனைகின்றனர்.

நன்றோ தீதோ, மாந்தரை வேட்கை என்னும் தளை வீசி அடிமைப்படுத்தும் இப்பொன் தெய்வத்தின் ஆற்றல் அளவிடற் கரியது. அதன் கடைக்கண் நோக்கத்தால் சிறியவர் பெரியவர்