உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

7

ஜெர்மென் கவிஞர் கெதெ (Goethe) ஆங்கில நாடகாசிரியர் மார்லோ (Morlow) முதலியவர்களுடைய பேய்க்கதைகளில் பேய்கள்தாம் மனிதரையும் மனித வகுப்பினரையும் பார்த்துச் சிரிக்கும். ஆனால் டால்ஸ்டாயின் இக்கதையில் மனித வகுப்பு, பேய்களைப் பார்த்து உள்ளூரச் சிரிக்கும் அடங்கிய சிரிப்புக்குரல் செவிப்புலனாகின்றது. பேய்களின் சிரிப்பை விட இம் மனித வகுப்பின் சிரிப்பு நம் செவிக்கும் நம் துன்புற்ற உள்ளத்துக்கும் எத்தனை ஆறுதல் தருகிறது!

டால்ஸ்டாய் போன்று பிற அறிஞரும் கதையாலும் கவிதையாலும் கட்டுரையாலும் பொன்னின் வேட்கையை வெறும் பித்து எனவும், அறியா மையால் வந்த மயக்கம் எனவும் ஏளனம் செய்துள்ளனர்! ஆனால் பித்துக்கும் ஒரு 'பிடி' இருக்க வேண்டுமே.கானல் நீர் கண்டு மயங்கியவர் அதில் என்றென்றுமா மயங்குவர்? அதுவும் நாகரிகமிக்க மக்களினம், நாகரிகமிக்க வல்லரசுகள் அதனுக்காகப் போரிடுமா?

உண்மையில் இக்கதைகளை எழுதியவர்கள் கூடப் பொன்னை வெறுத்தனர் என்று எண்ணிவிட முடியாது.ஆழ்ந்து நோக்கினால் அவர்கள் எள்ளி நகையாடியது பொன்னையல்ல, பொன் வேட்கையையே என்பது தெரியவரும். பொன்னின் உள்ளார்ந்த விலையையோ, அதன் மெய்ப் பயனையோ ஆராயாமல் மேலீடான அதன் தோற்றத்தில் மயங்கி ஏமாறும் மனப்பான்மையையே இவ்வறிஞர் ஒறுக்கின்றனர். மின்னுவ தெல்லாம் பொன்னல்ல: பொன் வேட்கையும் பொன்னுணர்வோ பொன்னின் பயனோ ஆகமாட்டாது.

பேராவற் பேயன் கண்ட உண்மை இதுதான். பொன் உணவாகாது, உடையாகாது, இரும்புபோல் கருவிகள் செய்யவும் உதவாது. அடுப்பில் வைத்தெரிக்க விறகுகூட ஆகாது. (ஆனால் பொன்னைக் கொடுத்து வ்வனைத்தும் பெறலாம்.) ஆகவேதான் பொன் உண்மையான செல்வமன்று, என்று அவர்கள் கூறினர்.

பொருள் அல்லது செல்வம் என்பது வாழ்க்கையின் கருவி மட்டுமே. பொன் நேரிடையான வாழ்க்கைக் கருவி அன்று; ஆகவே நேரிடையான செல்வமும் அன்று. அது அக் கருவியைக்