உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

அப்பாத்துரையம் - 39

பேயன் இவ்வுண்மைகளை யெல்லாம், நேரில் கண்ட பின்புதான் அறிந்தான்.

பொன் விருப்பத்திடையும் மாறாது கிடந்த அவன் தந்தையுள்ளம், புதல்வி பொன்னானபோதுதான் தன் பொன் மயக்கத்தினால் நேர்ந்த தவற்றின் முழு அளவையும் நன்கறிந்தது. அதன் பயனாக அவன் மனம் பொன் மீது வெறுப்புற்றது. பொன்னின் ஏமாற்றம் நீங்கி இயற்கையுலகே மீண்டும் வேண்டும் என்று அவன் விரும்பினான்.

பொன்னின் மதிப்பு மக்கள் மனத்தில் ஏற்பட்ட வேட்கையே யன்றி வேறன்று என்பதை டால்ஸ்டாயின் பேர்போன “மூட ஐவான்” கதை நன்கு விளக்கும். உலகில் பூசலும் போட்டியும் உண்டுபண்ணி அழிவு வேட்டையாட வந்த "பேய்கள்" பொன்னிலும் பொன் போன்ற வெளி மயக்குகளிலும் நம்பிக்கை வைத்த மற்ற உடன்பிறந்தாரிருவரையும் தம்முள்ளும் பிறருடனும் பகைமை கொள்ளும்படி தூண்ட முடிந்தது, அப்பகை வாயிலாக அவர்கள் அப் பேய்களின் தீக்கருத்துக்களுக்கு அடிமைப்பட்டு அவற்றின் அழிவுச் செயலுக்குக் கருவிகளாய் அமைந்தனர். ஆயின் பொன்னைப் பொருளாக மதியாது வாழ்க்கையையும் வாழ்க்கைக் கருவிகளையுமே பொருளாக மதித்த ஐவானிடம் பேய்களின் குட்டிக் கரணங்கள் எவையும் பயனளிக்கவில்லை.

டு

அவன் நாட்டு வேலையாட்கள் பேய்முதலாளியிடம் பணி பூண்டு பொன் காசுகளைப் பணி ஊதியமாகச் சில நாள் பெற்று அவற்றைத் தம் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாகக் கொடுத்தனர். பிள்ளைகள் அவற்றைப் பிற விளையாட்டுப் பொருள்களுடன் விளையாட்டுப் பொருள்களாகவே மதித்து விளையாடித் தம் வழக்கப்படியே சில நாளில் சலிப்புற்றனர். அதன் பயனாக அவர்கள் பெற்றோரிடம் சென்று “எங்களுக்கு னிப் பொன் காசுகள் வேண்டாம்; சங்கு, பாசி, பவழம் முதலியவையே வேண்டும். அவற்றைக் கொண்டுவந்து தாருங்கள்,” என்றனர். வேலையாட்களும் அதன்பின் பேயினிடம் சென்று "இனி எங்களுக்கு ஊதியமாகப் பொன் வேண்டாம். வேறு ஏதேனும் கொடு. சங்கோ, பாசியோ, பவழமோ எது இருந்தாலும் கேடில்லை. ஊதியமாகப் பெற்றுச் சென்று எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம்" என்றனர்.