உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. வாணிப வாழ்வு

அரசியலாரின் பொருளியல் திட்டத்துக்கும் வாணிப வாழ்விற்கும் பொன் எவ்வளவு இன்றியமையாதது என்பது. மேலீடாகப் பார்ப்பவர்க்குப் புலப்படாது. ஏனெனில் பொது மக்கள் பலவகைக் காசுகளில் பொற்காசுகளும் ஒருவகை என்றும், ஏழைக்குச் செப்புக் காசு எப்படியோ அப்படியே செல்வருக்குப் பொற்காசு என்றுந்தான் எண்ணுகிறார்கள். செப்புக் காசின் மதிப்பும் பொற்காசை அல்லது பொன்னைப் பொறுத்தது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. அதனை விளக்க வேண்டினால் செப்புக் காசின் செம்புக்கு விலை என்ன, பொற்காசின் பொன்னுக்கு விலை என்ன என்று ஆராய்ந்தால் போதும். செப்புக்காசின் விலைக்கும் அதிலுள்ள செம்பிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அரசியலாரின் பொறிப்பு இல்லாவிட்டால், உண்மையில் அஞ்சல் பொறிப்பில்லாத அஞ்சல் தலைபோலவும், விலை மதிப்புப் பதிவு இல்லாத விலைமதிப்புத் தாள் (நோட்டுகள்) போலவும் அது பயனற்றதே. பொன்காசு அப்படியன்று. அது பெரும்பாலும் பொன்னின் விலைக்கு ஒட்டியதாகவே இருக்கும். எங்கேனும் அரசியலார் பொன் காசில் பொன்னின் அளவையோ மாற்றையோ குறைத்துவிட்டால், காசின் விலைமதிப்பும் இறங்கிவிடுவது காணலாம். இதற்குக் காரணம் என்ன?

முன்னைய பிரிவு ஒன்றில் பொன் நேரிடையான செல்வம் அன்றென்றும் செல்வத்தின் மதிப்பீடு மட்டுந்தான் என்றும் கூறியிருக்கிறோம். ஆனால் அதன் மதிப்பு மதிப்புத்தாள் போன்றதும் அஞ்சல்தலை போன்றதுமான மதிப்பு அன்று. அவ்விரண்டிலும் பொறிப்பு வாயிலாக அரசியலார் அவற்றின் விலைக்குப் பொறுப்பு ஏற்பதனால் மட்டுமே அவற்றிற்கு மதிப்பு ஏற்படுகிறது. அவற்றின் ஆக்கப்பொருள் அல்லது முதற்