உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

19

பொருளான தாளுக்கு மதிப்பில்லை. ஓரளவு காசுகள் அனைத்தின் செய்தியும் இதுவே. ஆனால் பொற்காசு மதிப்புப் பெறுவது முற்றிலும் அரசியல் பொறிப்பினால் அன்று. அரசியல் பொறிப்பு அவ்வவ் அரசியலாரின் ஆட்சிப்பரப்புக்குள் மட்டுந்தான் செல்லும். ஆனால் பொற்காசுகள் உலகெங்கும் செல்லுகின்றன; ஏற்கப்படுகின்றன. காரணம் அவற்றின் விலை உண்மையில் அவற்றின் தங்கத்தின் விலையிலிருந்து மிகுதி குறையாதிருப்பதேயாகும். அங்ஙனம் எந்த அரசியலராவது குறைத்தாற்கூட அவ்வரசியலுக்கு வெளியிலுள்ள மக்கள் அதனை அதன் பொன் விலைக்கு ஒப்ப மதித்தே வாங்குகின்றனர். ஆகவே உலக வாணிபத்தில் காசு என்ற வெளியுருவம் இருந்தாலும் இல்லா விட்டாலும் பொன் ஒரே படியாக மதிப்பீட்டுப் பொருளாய் வழங்குகின்றது என்று காணலாம். அம் மதிப்பீட்டில் தனி மனிதர் அளவிலோ மாற்றிலோ ஏமாற்றுச் செய்யாமற் பாதுகாக்க மட்டுமே அதில் அரசியலார் பொறிப்பு டுகின்றனர். றனர். நல்ல பொருள்களுக்குப் பெரிய வாணிபக் குழாத்தினரோ நிலையமோ இடும் வாணிபக் குறியீட்டைப் போலவும் (Trade Mark), நாழிகளுக்கும் எடைகளுக்கும் அரசியலார் இடும் குறியீடு போலவும், (Seal of Standardisation) கற்றோர்க்கு அரசியலாரும் பல்கலைக் கழகங்களும் வழங்கும் பட்டம் போலவுமே இப்பொறிப்பு என்று அறிக.

உலகில் விலையுள்ள பொருள்கள் எத்தனையோ இருக்க, தங்கம் மட்டும் இங்ஙனம் வாணிப மதிப்புப் பெறுவானேன்? வாணிப உலகு திடீரென என்றும் தங்கத்தைக் குறியீடாகக் கொள்ளவில்லை. மிகப்பண்டு தொட்டு இத்தகைய நிலைக்கு அது வளர்ந்து வந்திருக்கிறது. பல காலத்திலும் பல இடங்களிலும் பல பொருள்களைச் செல்வத்தின் அறிகுறியாகக் கொண்டு நீண்டநாள் நிகழ்ந்த நடைமுறை அறிவினாலேதான் இறுதியில் மக்கள் பொன்னை ஏற்றனர்.

சொல்

இலத்தீன் மொழியில் செல்வம் என்ற ஆனினத்தையே முதலில் குறித்தது. ஆனினமே அவர்களிடையே செல்வமாகவும் செல்வத்தின் மதிப்பீடாகவும், பண்டமாற்றுக் காலங்களில் வாங்குவோருக்கும் கொடுப்போருக்கும் பொதுவான கொடுக்கல் வாங்கற் பொருள் அல்லது இடையீட்டுப்