உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20 || _ _.

அப்பாத்துரையம் - 39

பொருளாகவும் இருந்திருக்கவேண்டும். நாகரிகமாகிய நீரோட்டம் சென்று எட்டாத நாட்டுப்புறங்கள் சிலவற்றில் இன்றும் நெல்லும் அரிசியும் இத்தகைய இடையீட்டுப் பொருள்களாக வழங்கு கின்றன. ஆப்பிரிக்கரிடையே சங்கு மணிகள்கூட இத்தகைய இடையீடாக வழங்குகின்றனவாம். இப்பொருள்கள் ஒவ் வொன்றும் ஒவ்வொரு வகையில் மக்கள் வாழ்விற்கு உகந்தவையாகவே இருந்தன.

மக்கள் ஆனினங்களிலிருந்து பாலும் நெய்யும் பெற்று அதனால் அதனைச் செல்வமாகக் கொண்ட காலத்தில், அது, இடையீட்டுப் பொருளாயிருத்தல் இயற்கையே. ஆனால் ஆனினத்தை இடம்விட்டு இடங்கொண்டு செல்லுதல் முடியாது. அது பிணி மூப்பு இறப்புகட்கு ஆளானவை ஆதலின் அச்செல்வம் நிலவரமான ஒரே மதிப்புடைய தாயிருக்கவும் முடியவில்லை. சங்குமணிகள் ஆனினத்தினும் இடம்விட்டு இடம் கொண்டுசெல்ல வாய்ப்புடையவை. ஆனால் வாழ்க்கையில் நேரிடைப் பயன் அற்றவை. அழிவு பெறுபவை. மலிவாகக் கிடைப்பதனால் மதிப்பும் இழந்துவிடுகின்றன. நெல்லும் அரிசியும் மிக்க பயனுடையவை. சிறுமதிப்பு அளவில் எளிதிற் கொண்டுசெல்லவுங் கூடியவையே ஆனால் பரந்தலை காலநிலைகின்ற வாணிபத்திற்கொத்த விரிவு இவற்றிற்கு இல்லை. மாறின் இவை அழிவு பெறுவதனால் இவை என்றும் மாறா விலையுடையனவும் அல்ல.

திண்பொருள்கள் காசுகளாக வழங்கப்பட்ட காலமுதல் செல்வம் இடம்விட்டு இடம் பெயர்வது எளிதாயிற்று; வாணிபமும் ஏற்பட்டது. ஆனால் பிற திண்பொருள்கள் தம்மீதுள்ள பொறிப்புகளின் பயனாக மட்டும் விலை மதிக்கப் பட்டன. தங்கமோ மக்கள் அனைவரும் விரும்பியதனாலும், விலை மிகுதியும் அருமையும் உடையதாயிருப்பதனாலும்,

பாறிப்பினுக்காகவன்றி க்காகவன்றி தனக்கெனவே மதிப்புப்பெறத் தொடங்கிற்று. எனவே வாணிப உலகில் தங்கமே மதிப்பளவை (Standard) ஆயிற்று. உலகின் பேரரசுகள் இத் தங்கத்தைப் பெற்றுச் சேர்ப்பதன் மூலமே தம் நாட்டிற்கும் நாட்டின் காசுகட்கும் பிறநாடுகளில் செல்வாக்குத் தேடின.