உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

21

ஆகவே ஒரு நாட்டிற்குப் பொன் மதிப்பளவை இல்லாதுபோனால் நாட்டிலுள்ள செப்புக் காசுகள் நாட்டுக்கு வெளியில் மதிப்புக்கெடும் என்று காணலாம். வெளியில் மதிப்புக்கெட்டு நாளடைவில் உள்நாட்டிலும் அவை மதிப்புக்கெடும். அரசியலார் பொறிப்பும் விலையிழந்து அவர்களும் நிலைகெடுவர். ஆகவே இன்று வாணிப வாழ்வுக்கு மட்டுமன்றி அரசியல் வாழ்விற்குங் கூடத் தங்கம் அடிப்படை என்பது காணலாம்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் பொன்னுக்கு மாறாக அல்லது அதனுடனாக வெள்ளியை மதிப்பளவையாகக் கொள்வதுண்டு. அஃதாவது நாட்டில் வெளியிடப்படும் காசுகள். மதிப்புத் தாள்கள் இவற்றிற்கு, அவற்றிற் குறிக்கப்பட்ட தொகையின் பெறுமானமுள்ள வெள்ளியைக் கொடுக்க அரசினர் பொறுப்பேற்கின்றனர். ஆயினும் பொன் மதிப்பளவைகொண்ட நாடுகளும் வெள்ளி மதிப்பளவை கொண்ட நாடுகளும் வாணிப உறவு கொள்வதனால் நாளடைவில் இரண்டும் ஒரேவகை மதிப்புடையவை ஆகின்றன. ஆகவே பொன் மதிப்பளவை ஏற்காத நாடும் ஏற்கும் நாட்டைப் பின்பற்றியே செல்ல நேர்ந்து விடுகிறது.

நாகரிகமற்ற அக்கால மக்களையேயன்றி நாகரிகமுள்ள இக்கால மக்களையும் பொன்னின் பிடி இவ்வளவு உறுதியாகப் பிடிப்பானேன்? என்ற கேள்விக்குத் தெளிவான மறுமொழி கூறல் அருமையே. இது பொன்னின் எடையாலும் நிறத்தாலும் அழகாலும் என்பதெல்லாம் முற்றிலும் சரியன்று. ஒவ்வொன்றிலும் பொன்னை மிஞ்சிய பொருள் உண்டு. அவற்றை மேலே குறித்துள்ளோம். ஆயினும் அதன் நிறத்தாலும் அழகாலும் பொன் பெற்ற முதற்கவர்ச்சி பிற்காலத்தில் விலைக்குறியீடு வேண்டப்பட்டபோது பயன்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதோடு செல்வக்குறியீடு என்ற வகையில் அதற்குப் பிற பொருள்களில் ஒருங்கே காணப்படாத பல சிறப்புக்கள் இருப்பது காணலாம். விலையடக்கத்திலும் கையடக்கத்திலும் பொன்னுக்கு ஈடான பொருள்கள் மிகக்குறைவு; அச்சிலவும் பொன்னளவு அருமையாகக் கிடைக்காமலோ அல்லது வாணிபப் பழக்கத்திற்கான அளவிலும் குறைந்து மிக அருமையாகக்