உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. பொன்னின் வரலாறு

பழங்கால வரலாற்றைத் துருவி ஆராய்பவர் பொதுப் படையாகத் திண்பொருள்கள் மூன்று நான்கு ஆயிரம் ஆண்டு களுக்குள்ள ளாகத்தான் வழங்குகின்றன என்று கூறுகின்றார்கள். அதிலும் மனித நாகரிகத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமை யாததான இரும்பு மிகப் பிந்திய காலத்திலே அஃதாவது, இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்குள்ளாகவே தான் கையாளப் பெற்றிருந்த தெனத் தெரிகிறது. இப் பிற்காலம் 'இரும்பு ஊழி' என அழைக்கப் பெறுவதுமுண்டு. இதற்கு முந்திய காலத்தில் இரும்பினிடமாக வழங்கப்பட்டது. செம்போ வெண்கலமோ ஆகும். இச் 'செப்பூழிக்’ காலத்தில் இன்று இரும்பாற் செய்யப்படும் கத்தி, கோடரி, சுத்தி, கடப்பாறை, உளி, வில், வாள், ஈட்டிமுதலிய எல்லாக் கருவிகளும் செம்பினாலேயே அல்லது செம்புக் கலவைகளாகிய பித்தளை வெண்கலம் முதலியவற்றினாலேயே வழங்கின. இதற்கும் முந்திய மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த பண்டைக் குடிமக்கள் திண் பொருள்கள் எவற்றையும் பயன்படுத்தத் தெரியாதவர்களாய், இன்றியமையாத சில கருவிகளை மட்டும் கல்லினால் செய்து வந்தனர். இவ்வூழிக்குக் ‘கல்லூழி' என்று பெயர். திருத்தமும் கலைப் பண்பும் மிக்க கற்கருவிகள் வழங்கிய காலத்தைப் ‘புதுக்கற்காலம்’ என்றும், திருத்தமும் பண்பட்ட வடிவமற்ற கற்கருவிகள் வழங்கிய காலத்தைப் ‘பழங் கற்காலம்' என்றுங் கூறுவர்.

இன்றைக்கு 8,000 அல்லது 10,000 ஆண்டுகள் வரை முந்திய இப் பழங்கற்கால மனிதனின் கல்லறைகள் பல பழங்கால ஆராய்ச்சியாளராற் கண்டெடுத்து ஆராயப்பட்டுள்ளன. அவற்றுள் மனிதன் தனது சிறந்த உடைமையாகப் போற்றிய பிற பொருள்களுடன் வைத்திருந்த பொற் பூண்களும் காணப்பட்டன. இதிலிருந்து இரும்பையும் வெண்கலத்தையும் பித்தளையையும்