உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அப்பாத்துரையம் 40

-

உருவத்தைக் கண்டு, அக்கத்தியால் அவனை மாய்த்துவிட்டால் தான் அவள் உயிர் தப்ப முடியும் என்றும் அவர்கள் யோசனை கூறினார்கள்.

அப்பாவி சைக்கீ அன்றிரவு தூங்கவே இல்லை. அவள் உள்ளம் வெதும்பிப்போயிருந்தாள். எனவே, தன் காதலன் கண்ணயர்ந்ததும் அவள் மாயவிளக்கைப் பொருத்திப் பார்த்தாள் என்ன விந்தை! தன் கணவன் உலகில் யாருமே பெற்றிராத பேரெழில் பெற்றுக் கண்ணுக்கினியனாக விளங்கியதை அவள் கண்டாள்; அவனே காதல் தெய்வமான கியூப்பிட் என்பதையும் அவள் உணர்ந்தாள். கியூப்பிட் அதற்குள் விழித்தெழுந்து விட்டான். நடந்ததைப் பார்த்ததும் அவன் பெருஞ்சினங் கொண்டான். தான் இனி அவளை ஒருநாளும் பார்க்க முடியாதென்றும், அவள் இனி வாழ்நாள் முழுவதும் தன் கணவனைக் காணாமலேதான் வாழவேண்டுமென்றும் கூறிவிட்டு அவன் அங்கிருந்து மறைந்தான்.

னி

தன் பேதைமையால் விளைந்த பெருங்கேட்டை எண்ணிப் பெருந்துயரில் ஆழ்ந்த சைக்கீ அம்மாளிகையிலிருந்து வெளியேறினாள். பொன் மாளிகையின் கதவுகள் அவள் சென்றபின் இறுக மூடிக்கொண்டன. அன்பனை இழந்த சைக்கீ அழுது அரற்றி நிலையில்லாமல் எங்கும் திரிந்தாள். தெய்வங்களின் தந்தையான சீயஸ் பெருமான் அவளை மன்னித்து அவளைத் தெய்வ அணங்காக மாற்றி, அவள் தன் கணவனுடன் என்றும் வாழும்படி செய்த கதையை மற்றொருமுறை கூறுகிறேன்.

பழங்கால கிரேக்கர்களின் பல கடவுளர்களில் அரோரா வைகறைத் தெய்வமாக வணங்கப்பட்டாள். அவள் உலக மக்களுள் ஒருவனான ஓர் ஆண்மகனை மணந்ததாகக் கதை கூறப்படுகிறது.

கிரேக்கர்கள் தங்கள் தெய்வங்கள் ஒலிம்பசு மலையில் உறைந்து வந்ததாகவும், அவர்கள் பூவுலகத்துக்கு அடிக்கடி வந்து அங்கு வாழ்ந்த அழகிற்சிறந்த மக்களை மணந்து மகிழ்ந்ததாகவும் கருதினார்கள்.

ஆனால், அவர்கள் மணந்த உலக மக்கள், தெய்வங்களைப் போல் குன்றாத அழகும், ெ ளமையும், சாவா வரமும்