உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

93

பெற்றவர்கள் அல்லர். ஆகையால், சில ஆண்டுகள் கழிந்ததும் அவர்கள் முதுமையடைந்து நலிவுற்று மடிவார்கள். சிற்சில சமயங்களில் சில தெய்வங்கள் அவர்களும் இறவாநிலை பெறவேண்டும் என்று கடவுளரின் தந்தையான சீயஸ் பெருமானிடம் வரம் கேட்டுப் பெறுவதுண்டு. ஆனால், அவர்களுக்கு நீங்காத இளமை நிலைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்க மறந்துவிடுவதுண்டு. எனவே, தெய்வங் களை மணந்த மாந்தர்கள் இறந்துவிடாமல் நீடித்து உ உயிர் வாழினும், காலப்போக்கில் அழகு மங்கி, உடல் வலு தளர்ந்து, தொண்டு கிழமாகிவிடுவார்கள். அவர்களை மணந்த தெய்வங்கள் முன்பு அழகினால் அவர்கள்மீது கொண்டிருந்த அன்பை இழந்துவிடுவார்கள். ஆனால், அவர்கள் மீது கொண்ட பரிவால் அவர்களை அத்தெய்வங்கள் மீண்டும் உலகிற்குக் கொண்டுவந்து விட்டுச்செல்வார்கள். அவ்வாறு விட்டுச் செல்லும்போது, அவர்களை விலங்குகள், பறவைகள் முதலிய உயிரினங்களாக உருமாற்றி விடுவார்கள். உருமாறிவிட்டாலுங் கூட, அவர்களுக்கு உலகில் வாழ்வது தான் மகிழ்ச்சியைத் தந்தது.

ஆனால், ஒலிம்பசுத் தெய்வங்கள் இவ்வாறு குறுக்கிடாமல் அவர்களைத் தங்கள் இயல்பான வாழ்வுக்கே விட்டுவிட்டிருந் தால், இன்னும் எவ்வளவோ நலமாக இருந்திருக்கும் அல்லவா? வைகறைத் தெய்வமான அரோரா, கிரேக்கர் தெய்வங்கள் எல்லாரிலும் அழகிற் சிறந்தவளும் மனத்தைக் கவர்ந்தவளும் ஆவள்.

பொழுது விடியும்போது, கீழ் வானத்தில், நீல விசும்பில்

செந்தழல் வண்ணமும் பொன்னிறமும் அவைகளின் கலவைகளும் சேர்ந்து உள்ளத்தை மகிழ்விக்கும் ஓவியமாகத் தோற்ற மளிப்பதைக் கண்டு வியந்த பண்டைக் கிரேக்கர்கள், அதை ஒரு பெண்ணென உருவகப்படுத்தினர். தாமரை இதழ்போன்ற மலர்முகம் படைத்த மகள் ஒருத்தி, பொன்வண்ணத் தேரில் ஏறி, முத்துகளாலான தலைவாசலைக் கடந்துவந்து பகல் பொழுதின் வருகையை அறிவிப்பதாக அவர்கள் கருதினார்கள். அத்தெய்வமகளின் உடை செந்தழல் நிறமாக இருக்கும். அவள் மேலே போர்த்தியிருந்த போர்வை ஊதா நிறமுள்ளது. அவள் உச்சி நெற்றியில் சுடர்விடும் விண்மீன் ஒன்று ஒளிரும். அவள் ஒரு