உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

125

அரியட்னேயுடன் தீஸியஸ், தன் தோழர் பதின்மூவரும் ருந்த கப்பலண்டை வந்தான். அவர்கள் அவனை எதிர்பார்க்க வில்லை. கண்டதும் மகிழ்ச்சிக் கூத்தாடத் தொடங்கினர். ஆனால் தீஸியஸ் இன்னும் அவர்களுக்கு மினாஸால் ஏற்படக்கூடும் துன்பத்தைத் தெரிவித்து, விரைந்து அதேன்ஸுக்குப்

புறப்படும்படிகட்டளையிட்டான்.

வழியில் தீஸியஸ் தன் தோழர்களுக்கு அரியட்னே யார் என்பதைத் தெரிவித்து, அவள் உதவிய வகைகளையும் அவ்வுதவியுடன் தான் மினோட்டாரைக் கொன்ற வகையினையும் விரித்துரைத்தான் அனைவரும் தீஸியஸ் வீரத்தையும் அரியட்னேயின் அரிய அறிவுக் கூர்மையையும் காதலுறுதியை யும் புகழ்ந்தனர்.

மினோட்டார் இறந்ததை அறிந்த மினாஸ் தீஸியஸையும் அதேனிய இளைஞர் நங்கையரையும் பிடித்துக் கொண்டு வர ஆட்களனுப்பினான். அவர்கள் வருமுன் அதேனியர் நெடுந் தொலை கடலில் சென்றிருந்தனர். அதேன்ஸ் நகர்மீது தனக்கிருந்த ஆதிக்கம் அகல்வது கண்டு சினந்தெழுந்த மினாஸ் இளைஞனைப் பிடிக்கச் சென்ற வீரர்களைத் தூக்கிலிட்டான்; ஆனால், தன் புதல்வி அரியட்னே கூட எதிரியுடன் சேர்ந்து ஓடியது கேட்டதே; அவன் சீற்றம் கரைகடந்தது. மருட் கோட்டத்தைப் போதுமான அளவு திறமையுடன் அமைக்க வில்லை என்று கருதி அவன் டேடலஸ்மீது பாய்ந்தான். டேடலஸும் அவன் புதல்வன் இக்காரஸும் கடுஞ் சிறையில் தள்ளப்பட்டனர்.

டேடலஸும்,

க்காரஸும் தம் கலைத் திறத்தைப் பயன்படுத்தித் தப்பியோட வழிசெய்தனர். அவர்கள் கழிகளைப் பிணைத்து மெழுகு பூசி இறக்கைகள் செய்தனர். அவற்றின் உதவியால் அவர்கள் வானில் பறந்து சென்றனர். இளைஞனாகிய இக்காரஸ் இப்புதிய ஆற்றலால் மிகுதி கிளர்ச்சி பெற்று முகில் கடந்து பறந்தான். வெங்கதிரவன் ஒளி முழுவேகத்துடன் இறக்கைகளைத் தாக்கியதால் மெழுகு இளகிற்று. இறக்கைகள் சிதைந்து அவன் கடலில் வீழ்ந்து இறந்தான். டேடலஸ் மட்டும் கடல் கடந்து அயல்நாடு சென்று, மகன் முடிவால் எச்சரிக்கை யடைந்து, தன் கலைத்திறத்தைப் பணிவுடன் பயன்படுத்தி வாழ்ந்தான்.