உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. அட்லாண்டாவின் ஓட்டப்பந்தயம்

(ஆண்மையில் ஆடவரை வென்ற ஒரு நங்கை! வீரன் மெலீகரின் மதிப்புக்குரியவளாகியும், அவள் காதலை வெறுத்து வாழ்ந்தாள். இறுதியில் காதல் அவள் வாழ்வில் புகுந்து அவளை மாற்றிய வரலாறே அட்லாண்டாவின் கதையாகக் காட்சி தருகிறது.)

ஷேணியஸ் என்ற அரசனுக்குப் பெண்குழந்தை என்றாலே பிடிக்கவில்லை. அவனுக்கு ஆண்குழந்தைகள் பிறந்த போதெல்லாம் மகிழ்ச்சியடைந்தான். ஆனால், இறுதியில் அட்லாண்டா பெண்குழந்தையாய்ப் பிறந்தபோது, அதை ஏற்க மறுத்தான். அதை மலைப்பாறைகளில் கொண்டு போட்டு விடும்படி கட்டளையிட்டான்.

குட்டியை இழந்த ஒரு கரடி,. குழந்தை அட்லாண்டாவைச் சிலநாள் பேணி வளர்த்தது. காட்டில் கரடி வேட்டையாடிய சில வேடர் அவளைக் கண்டெடுத்துத் தம் பிள்ளையாக வளர்த்தனர். அவளும் நாளடைவில் வேட்டையில் வல்லவளானாள். ஆடவரைவிடத் திறமையாக ஓடவும் குதிரையேறிச் செல்லவும் இலக்குத் தவறாது அம்புசெலுத்தவும் அவள் பழகினாள்.

அட்லாண்டா நெட்டையான அழகான வடிவமைப் புடையவளாயிருந்தாள். ஆயினும் மற்ற அழகிய பெண்களைப் போல அவள் இன்பவாழ்வு வாழ விரும்பவில்லை. ஓட்டப் பந்தயங்களில் அவளை வெல்லும் ஆடவர் கிடையாது. வேட்டையிலும் போரிலும் அவள் முதன்மை பெற்று விளங்கினாள். பெண்களின் இயற்கைப்படி அவள் இளைஞர் களைக் காதலிக்கவோ, அவர்கள் காதலுக்கு இடங்கொடுக்கவோ இல்லை.

அவள் ஆடவரிடையே ஒரு தடவைதான் ஒருவனிடம் ஆழ்ந்த நட்புக்கொண்டாள். மெலீகர் என்ற ஒப்பற்ற வீரனிடம்