உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

அப்பாத்துரையம் 40

-

பொல்லராஃவானும் பெகாஸஸும் சிலகாலம் கொரிந்த் நகரைச்சுற்றித் திரிந்து அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால், அரசன் நண்பன் ஒருவன், பெல்லராஃவானுடன் பகைத்துக் கொண்டான்.பெல்லராஃவான் அவனுடன் ஒருநாள் போராடு கையில் அவனைக் கொன்றுவிட நேர்ந்தது. இச்செயலுக்குப் பின் அவன் கொரிந்திலிருக்க விரும்பாமல், திரேஸன் நகர் சென்றான்.

திரேஸன் நகரின் மன்னன் மகள், பெல்லராஃவானிடம் காதல் கொண்டாள். இருவரும் மணந்து கொள்ளப்போகும் சமயம் கொரிந்திலிருந்து வந்த தூதன் பெல்லராஃவான் செய்த காலையைப்பற்றி மன்னனிடம் மன்னனிடம் கூறித் திருமணத்தை நிறுத்திவிட்டான். இதனால் மனமுடைந்து பெல்லராஃவான் பெகாஸஸுடன் பறந்துசென்று, டிரின்ஸ்நகரை ஆண்ட மன்னன் பிரேட்டஸிடம் போனான். பிரேட்டஸ் அவனுடன் மிகவும் நட்பாடி அளவளாவி, அவனுக்கு வேண்டிய வாய்ப்பு நலங்கள் செய்து தந்தான்.

பிரேட்டஸின் மனைவி ஸ்தெனோபீயா மிகவும் அழகுடையவள். ஆனால், அழகுக்கேற்ற நற்குணம் அவளிடம் இல்லை. அவள் பெல்லராஃவானிடம் தகாப்பற்றுக்கொண்டாள்; பெல்லராஃவானிடம் பறக்கும் குதிரை இருந்ததைச் சுட்டிக்காட்டி, தன்னை மட்டும் இட்டுக் கொண்டு ஓடிவிடும்படி கோரினாள். பெல்லராஃவான் தன் நண்பனுக்கு நன்றிகேடனாக விரும்பவில்லை. இதனால் ஸ்தெனோபீயாவுக்கு அவன்மீது சீற்றம் வந்தது. தான் செய்ய எண்ணியதை அவன் செய்ய முனைந்ததாக அவள் தன் கணவனிடம் கூறி அவனைச் சினமூட்டினாள்.

மன்னன் இப்போது பெல்லராஃவானுக்குத் தெரியாமலே அவன்மீது பகைமைகொண்டான். ஆனாலும், அவன் நேரில் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. லிஸியாவிலுள்ள அரசன் அயோபேட்டிஸ் அவன் மாமன்; ஸ்தெனோபீயாவின் தந்தை. அவனுக்கு ஒரு கடிதம் எழுதி ஸ்தெனோபீயா கூறிய குற்றச் சாட்டைத் தெரிவித்தான். அதற்குரிய தண்டனையை அளிக்குமாறும் வேண்டியிருந்தான். சூதுவாதற்ற பெல்லராஃவா னிடமே இந்தக் கடிதத்தைக் கொடுத்தனுப்பினான்.