உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

175

அயோபேட்டிஸ் கடிதத்தில் கண்ட செய்தியையும், அதில் குற்றஞ்சாட்டப்பட்டவனே ஐயுறவு எதுவுமின்றி அதைக் கொண்டுவந்து கொடுத்ததையும் கண்டு வியந்தான். முதலில் களங்கமற்ற பெல்லராஃவானின் முகத்தைக் கண்டதும், இதை நம்பமுடியவில்லை. ஆயினும், தன் மகளையும் மருமகனையும் நம்பாதிருக்க வழியின்றி, அவன் தக்க நடவடிக்கையில் முனைந்தான்.

லிஸியா அருகே வெள்ளாட்டின் உடலும், பாம்பின் வாலும், சிங்கத்தின் தலையும் உடைய ஒரு கொடுவிலங்கு இருந்தது. அதனை மக்கள் சிமேரா என்று அழைத்தனர். அதை அணுகிய எவரையும் அது விழுங்காது விடுவதில்லை. அயோபேட்டிஸ் அதைக் கொல்ல அனுப்பும் சாக்கில், பெல்லராஃவானை அதற்கு இரையாக்க எண்ணினான்.

ஆனால், பெகாஸஸ் இவ்வகையில் சொல்லியது பெல்லராஃவானுக்குப் பெரிய உதவியாயிற்று. அவன் மிக நீண்ட வாளை எடுத்துக் கொண்டு பறந்து சென்றான். சிமேரா அறியாமல் அவன் தாழ்ந்து அதன் தலைமேலாகப் பறந்து சென்றான். அதன் அருகே பறக்கும்போது தன் நீண்ட வாளால் அதன் தலையை வெட்டி வீழ்த்தினான்.

பெல்லராஃவானின் அருஞ்செயல் கேட்டு அயோ பேட்டிஸ் ஒருபுறம் அச்சமும், மற்றொருபுறம் வியப்பும் கொண்டான். அவனைக் கொல்ல அவன் பல்வேறு முயற்சிகள் செய்தும் பயனில்லாது போயிற்று.

தேவர்களின் அருளை இந்த அளவுபெற்ற இளைஞன் தன் மகளைக் கவர்ந்துகொண்டு செல்ல முயன்றான் என்ற செய்தி மீது அவனுக்கு மீண்டும் பெருத்த ஐயுறவு ஏற்பட்டது. ஒருநாள் அவன் பெல்லராஃவானிடமே நேரில் அதைக் கேட்டுவிட்டான். பெல்லராஃவான் அது கேட்டுத் திடுக்கிட்டான். மன்னன் தன் மருமகன் அனுப்பிய கடிதத்தைக்காட்ட, அவன் திகைப்பும் திகிலும், சீற்றமாக மாறிற்று. அவன் அயோபேட்டிஸிடம் ஒன்றும் கூறாமல், இரவே டிரின்ஸ்நகர் சென்றான்.

அரசன் அரசி அறியாமல் சிலநாள் அங்கேயே தங்கி யிருந்து, தனியாக ஸ்தெனோபீயா உலவிய சமயம் அவள் முன்