உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




184

-

அப்பாத்துரையம் 40

மென்றும், அவள் பாட்டை மறுமுறை கேட்கவேண்டும் என்றும் அவனுக்கு ஆசை உண்டாகிவிட்டது. மறுபடியும் அவன் மலைமீது நெடுகலும் சென்று தேடினான். மீண்டும் மீண்டும் பலநாள் தித்திக்கத் தேனூறும் அந்தத்தெய்வீக இசை கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், பாடியவர் மட்டும் கண்ணுக்குப் புலப்படவேயில்லை.

மலையழகனுக்கு மனக்கவலை யுண்டாகிவிட்டது.உடலும் மெலியத் தொடங்கியது. பக்கத்து ஊர்களுக்குப் பாலும் வெண்ணெயும் விற்கச் செல்லும்போது, வழக்கம்போல் பாடிக் கொண்டே செல்வதும் நின்று போய்விட்டது; நாட்டாண்மைக் காரர் மகள் நின்ற இடத்தைத் திரும்பிக்கூடப் பார்க்க அவனுக்குத் தோன்றவில்லை; அதனால் அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. அவள் கண்ணீர் விட்டுக் கண்ணீர் விட்டுப் பன்னீர்ப் பூச்செடியின் மூடுங்கூட அழுகிவிட்டது.

ஒரு நாள் மலையழகன் வழக்கம்போல ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது ஆட்டுக்குட்டி ஒன்று வழிதவறி எங்கோ சென்றுவிட்டது. ஒவ்வொரு குட்டியிடமும் தனித்தனியே தாய்போல் அன்பு கொண்டிருந்த அவனுக்கு அது காணாமற் போனது உயிரைப் பறி கொடுத்ததுபோல் இருந்தது. எனவே, காடென்றும் மலையென்றும் பாராமல் அதுவரையில் சென்றறியாத இடங்களுக்கெல்லாம் சென்று தேடினான். அப்படித் தேடிச் செல்கையில் இக்கதையின் துவக்கத்தில் சொல்லப்பட்ட அந்தத் தெளிந்தநீர் ஏரிக்கரைக்கு வந்து விட்டான்.

அங்கு வந்தானோ இல்லையோ, உடனே அங்கே அவன் என்றும் உணர்ந்தறியாத இன்பமூட்டும் அமுத இசை எழுவதைக் கேட்டு இறும்பூ தெய்தினான்; அவ்வளவு அருகில் எழும் அந்த இன்பப்பாடல் வரும் திசையை நோக்கினான். ஏரியின் மறு கரையில் அவனுக்கெதிரே ஒரு சிறந்த எழிலணங்கு நிற்பதையும், உயிரையும் உடலையும் ஒருங்கே பிணிக்கும் அந்தத் தீங்குரல் அவளிடமிருந்தே கிளம்புவதையும் அவன் கண்டு பெருவியப்பெய்தினான்.

மலைநாட்டு மகளிரெல்லாம் வனப்புமிக்கவர்களாகவே இருப்பினும், அதுவரையில் அவன் அவ்வளவு அழகுமிக்க