உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




186

||_ _

அப்பாத்துரையம் 40

-

தாயை மறந்தான்; அவன் தேடிய இளமறியை மறந்தான்; அவனைக் காணக் காத்திருக்கும் நாட்டாண்மைக்காரர் மகளையும் மறந்தான்; "இதோ வருகிறேன்" என்பவன்போல் அப்பனிக்கட்டிமீது விரைந்து அடியெடுத்து வைத்தான்.

து

சருக்கி ஓடுவதுபோல் சென்ற அவன், ஏரி நடுவை அடைந்தான்; கடுங்கசம்; அங்கே நீர் ஆழம் பாதாளம் வரையில் எட்டும் என்று மக்கள் நம்பி வந்தனர். அந்த இடத்திற்கு அவன் வந்ததுதான் தாமதம், பனிக்கட்டி திடீரென மறைந்தது; மிகவிரைவில் அவன் கீழ் மட்டத்துக்கு இழுத்துச் செல்லப் பட்டான்; ஏதோ ஓர் அரிய ஆற்றல் அவனைக் கட்டிப் பிடித்துக் கீழே கொண்டு சென்றது. கரையில் நின்ற அந்த எழில் மங்கை நீர் அணங்கும் உடன் மறைந்தாள். அவளது தந்தக் கடைசல் போன்ற இள மென் கைகள் அவனை அணைத்துத் தழுவின. அமுத இசை பொழிந்த அவள் வாயிதழ்கள் அவன் முகத்தில் பதிந்தன. அவனை ஏந்திக்கொண்டே அவள் அவள் கீழே நீர் மட்டத்தி னடியிலிருந்த தன் அழகிய அரண்மனைக்கு அதிவிரைவாகச் சென்றாள்.

அன்று மாலையில் மலையழகனது ஆடுகளும், மாடுகளும் தலைவனின்றித் தனியே வீடு திரும்பின; மகிழ்ச்சி ததும்பி நின்ற அக்குடிசையில் சோகமும் துயரமும் குடிகொண்டன.

கடும்புயல் வீசும் இராக்காலங்களில், வானம் மையமாக இருண்டிருக்கும்போது, காற்றலைத்துப் பொங்கிப் புடைக்கும் பேரலைகள் குமுறி எழும் சமயங்களில், அந்த மலை ஏரிக்கரையில் பாறைமீது உட்கார்ந்து கல்லும் உருகும் வண்ணம் அழுது அரற்றும் ஒரு கிழ உருவத்தைக் காணலாம். மறைந்த மகனைக் கூவியழும் பெருங்குறத்திதான் அவ்வுருவம்.

ஒவ்வோர் ஆண்டும் சித்திரைத் திங்கள் நிறை நிலவில், அந்தி வெள்ளியும் திங்களும் வான நடுவில் இருக்கும்போது, படிகம் போல் தெளிந்த அந்த ஏரித் தண்ணீரின் கீழே தொலைதூரத்தில் இரண்டு எழில் உருவங்கள் ஒன்றை ஒன்று தழுவி இன்புற்றிருப்பது நன்றாகத் தெரியும். என்றும் பிரியாமல் ணை ண வாழும் நீரணங்கும் மலையழகனும்தான் அப்படி மெய்ம்மறந்து இருக்கின்றனர்.