உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. பச்சைக்கிளி

முன்னொரு காலத்தில், பெரியண்ணன் என்னும் ஒரு குடியானவன் மலையடிவாரத்தில் உள்ள குடிசை ஒன்றில் வசித்து வந்தான்.பெரியண்ணனுக்குத் திருமணமும் ஆகிப் பன்னிரண்டு பெண்மக்களும் இருந்தனர். ஆனால், குழந்தைகள் பெற்றெடுத்த தனால் அவனுக்குத் துன்பந்தான் அதிகம் ஆயிற்றே தவிர, மகிழ்ச்சிக்கு வழியில்லை. அவனும் அவன் மனைவியும் மிகவும் ஏழைகள்; அவர்களுக்கென்று சொல்லிக்கொள்ள வறுமையையும் அந்த ஓலைக் குடிலையும் தவிர வேறு ஒன்றும் கிடையாது. தகப்பனும் தாயும் குழந்தைகளும் காலையில் இருந்து இரவு வரையில் ஓயாது உழைத்து வந்தார்கள். அதனால் ஏதோ அரைவயிற்றுக் கஞ்சிதான் குடிக்க முடிந்ததே தவிர, சிறப்பாய் வாழ வழி ஏற்படவில்லை. குடும்பமும் பெருகிக்கொண்டே வந்தது.

கடுங்கோடையில் ஒரு நாள் உச்சிப்பொழுதில் ‘சுள்' என்று வெயில் காய்ந்து கொண்டிருந்தது; தரையிலிருந்து கானல் பரந்து கண்களை உறுத்தியது; பெரியண்ணன் மலை அடிவாரத்தில் உள்ள பாதாளக் குகையின் அருகில் குழி தோண்டி கொண்டிருந்தான். அந்தக் குகையில் யாருமே எட்டிப் பார்த்தது கிடையாது. அடிக்கடி அதிலிருந்து குடல் நடுங்கும் உறுமல் ஒலிகள் கேட்கும். அதைப் பேய்க் குகை என்று அந்த வட்டாரத்து மக்கள் குறிப்பிட்டு வந்தார்கள். வெயில் கடுமையாக இருந்த படியால், பெரியண்ணன் மண்வெட்டியைக் கீழே வைத்துவிட்டு அருகில் ஓங்கி வளர்ந்திருந்த மருதமரத்து நிழலில் சற்று இளைப்பாற உட்கார்ந்தான். இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது, அவன் மனதில் பல வகையான எண்ணங்கள் வந்து துன்புறுத்தின. ஒரு குழந்தையைக்கூட வைத்துக் காப்பாற்ற முடியாதபடி அவர்கள் அவ்வளவு ஏழையாயிருக்கையில்,