உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




192

-

அப்பாத்துரையம் 40

ஓணானும் பச்சைக்கிளியும் குகையின் அடித்தளத்துக்குச் சன்றதும், குழந்தைக்குப் பால் வழங்கப்பட்டது. பால் குடித்தபின் அது தாலாட்டித் தூங்க வைக்கப்பட்டது. அவள் தூங்கும்போது அவளை ஓணான் மெல்லத் தூக்கி எடுத்து மலையின் மேலிடத்துக்குக் கொண்டு சென்றது. அங்கே அவளுக் கென அது ஒரு பெரிய மாளிகையை அமைத்தது. பூங்காவும் புல்வெளிகளும் பழத்தோட்டங்களும் நிழல்மரச் சோலைகளும் அதைச் சுற்றி அமைக்கப்பட்டன. குழந்தை பச்சைக் கிளி அம் மாளிகையிலுள்ள அழகான ஓர் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். வழுவழுப்பான சுவர்களும், சலவைக்கல் தளமும், பூவேலைப்பாடு அமைந்த மேல் தளங்களும் உள்ள அந்த அறையில் இரு செவிலித் தாய்மார்கள் அவளைப் பேணி வளர்த்தார்கள். ஆனால், ஓணான் அவளை ஒரு நொடிகூட விட்டு அகலுவதே இல்லை. அவள் எது கேட்டாலும் உடனே வாங்கித் தந்து அவள் ஆவலைத் தீர்க்க ஓணான் காத்துக் கிடந்தது. இப்படியாக அந்த அழகான சூழ்நிலையில், ஓணானும் செவிலித்தாயும் மற்றுமுள்ளவர்களும் அன்பைச் சொரிந்து சீராட்டிப் பாராட்டி வளர்த்துவரப் பச்சைக் கிளி கவலையற்ற சோலைக்கிளிபோல் வளர்ந்து வந்தாள்.

ஆண்டுகள் சில கழிந்தன. பேரெழிலும், நற்பண்பும், கல்வி, கலை, இசைப் பயிற்சியும் பெற்ற நங்கையாகப் பச்சைக்கிளி பருவமெய்தினள். ஓணானை அவளுடைய தாய்போல் கருதி அன்புடன் நடந்துவந்தாள். உண்மையில் ஓணான் அவளுக்குத் தாயும் தந்தையுமாக இருந்தது. முன்பு சொல்லியதுபோலவே அவளை அன்பாக அது வளர்த்து வந்தது.

அப்போது ஒருநாள் அந்நாட்டு அரசன் வேட்டைக்குச் சென்றவன் பொழுதடையும் வரை வேட்டையிலேயே ஈடுபட்டு நின்றுவிட்டானாகையால், வழிதப்பி இரவில் தங்குவதற்கு இடம்தேடி அலைந்தான். நடுக்காட்டில் ஒதுக்கிடமின்றி மனம் சோர்ந்த நிலையில் இருந்த அம்மன்னன் மலையுச்சி யில் விளக்கு வெளிச்சம் திடீரெனத் தெரிந்ததைக் கண்டு, அது யார் வீடென்றும், தங்குவதற்கு அங்கு இடம் கிடைக்குமா என்றும் தெரிந்து வருமாறு அவன் ஊழியரை அனுப்பினான்.