உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. மீனம்மை

வெகு காலத்துக்கு முன் ஆனைமலைச் சாரலில் நல்லம்மை என்று ஒரு கிழவி இருந்தாள். அவளுக்குப் பொன்னம்மை, சின்னம்மை, மீனம்மை என்று மூன்று பெண்கள் இருந்தனர். நல்லம்மையின் கணவன் உயிரோடிருந்த காலத்தில் அவர்கள் வாழ்க்கை எவ்வித க எவ்வித இடையூறுமின்றி, இனிது நடந்து வந்தது.அப்போது அவர்களுக்குச் சொந்தமாகக் குடியிருக்க ஒரு குடிசையும், சாப்பாட்டுக்கு ஒரு வயலும், கறவைக்கு இரண்டு பசுக்களும் ஓர் ஆடும் இருந்தன. நல்லண்ணனும் விடிந்தது முதல் அடைந்தது வரையில் சளைக்காது உழைத்து வந்தான். ஆனால், இக்கதை தொடங்குவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் அவன் இறந்து விட்டதன் பின் காரியங்கள் எல்லாம் வரவரச் சீர்கேடு ஆகிவிட்டன. காடு கழனியில் உழைத்துப் பாடுபட ஆளுமில்லை; நூல் நூற்று விற்பதற்கு முடியாதபடி நல்லம்மை யின் உடலும் தளர்ந்து விட்டது. எனவே, வாழ்க்கைச் செலவை நடத்தும் பொருட்டுச் சிறிது சிறிதாக வயலும் விலையாகி விட்டது; பிறகு மாடுகளும் ஆடுகளும் விற்கப்பட்டன. ஒரு கீரைப்பாத்திகூடப் போடமுடியாத கொல்லைப்புறம் சூழ்ந்த அக்குடிசை மட்டுந்தான் மிஞ்சியிருந்தது. யாருக்காவது வேலை செய்வதையோ, தெருவில் பிச்சை எடுப்பதையோ தவிர வேறு எதுவும் செய்து பிழைக்க அக்குடும்பத்தாருக்கு வழியில்லை.

மூத்த பெண்களான பொன்னம்மையும் சின்னம்மையும் வெறும் உதவாக்கறைச் சோம்பேறிகள்; தாயாருக்காக ஒரு சிறு வேலையைக்கூடச் செய்யத் தயங்கும் தன்மை உள்ளவர்கள். போதாக்குறைக்கு அவர்களுக்குத் தங்கள் தங்கை மீனம்மைமீது பொறாமை. மீனாள் மிகவும் அழகு வாய்ந்தவள்; அவள் பற்கள் முத்துப்போல் வெள்ளையாக இருக்கும்; வாய் பவளம்போல் சிவப்பாக இருக்கும்; கண்கள் அவள் பேருக்கேற்றபடி கயல்