உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

199

மீன்கள்தான். கருத்து இருண்டு சுருண்ட அவளது கூந்தல் பட்டுப்போல் மெத்தென்றிருக்கும். அவள் கந்தல் உடை உடுத்திருப்பினும் கூட அவள் அழகு மிகுந்து தான் விளங்கினாள். உடல் அழகைப்பற்றி அவ்வளவாக அக்கறை கொள்ளாத குடியானவர்கள்கூட மீனம்மை எதிர்ப்பட்டால் திரும்பி நின்று பார்த்து அவளது அழகை வியந்து மகிழ்ந்துதான் செல்வார்கள். தங்கள் கையில் பூவோ, பழமோ, கறிகாயோ ஏதேனுமிருந்தால் அதை அவளிடம் அன்புடன் அளித்துச் செல்வார்கள். அதனால் அவளுடைய தமக்கையர் இருவருக்கும் மேலும் அதிகப் பொறாமைதான் உண்டாகி வந்தது. ஆகையால் அவர்கள் அவளை எப்போதும் சிடு சிடுவெனப் பேசியும் வாய்ப்பு வாய்க்கும்போது அடித்துத் துன்புறுத்தியும் வந்தார்கள்.

ஒருநாள் காலைக்கதிரவன் தன் தங்கக் கதிர்களை விசிறிபோல் பரப்பிக்கொண்டு மலைமுடிகள் மீது தோன்றி ஒளிவீசிக்கொண்டிருந்த நேரத்தில், மீனா ஒரு வாழைப்பூவும் கையுமாக வீட்டுக்கு வந்தாள்; மலைமேட்டில் வருத்தத்துடன், வண்டி இழுத்துக்கொண்டிருந்த ஒரு குடியானவனுக்கு உதவியாக மீனாள் வண்டியைத் தள்ளிச் சென்றதைக் கருதி, அவன் மீனாளிடம் அந்த வாழைப்பூவை அன்புடன் கொடுத்திருந்தான். நல்லம்மைக்கு ஒரே கொண்டாட்டமாகி விட்டது. வீட்டிலிருந்த இஞ்சித்துண்டையும் உப்பையும் போட்டு வாழைப்பூக் கறிவைத்து அன்று காலைக் கஞ்சி குடித்து மகிழலாம் என்று மனம் பூரித்தாள். வாழைப்பூவைக் கழுவி அவிக்கத் தண்ணீரைத் தேடினாள். பானையில் தண்ணீர் இல்லை.

“பொன்னம்மா, நீ என் கண்ணல்லவா! மலை அருவிக்குப் போய் ஒரு தோண்டித் தண்ணீர் எடுத்துவா அம்மா,” என்று நல்லம்மை தன் மூத்த மகளைக் கேட்டுக் கொண்டாள்.

மலை அருவி குடிசையிலிருந்து அரைமைல் தொலைவிலிருந்து கரடு முரடான ஒற்றையடித் தடத்தில் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஏறித்தான் அங்கே போக முடியும். ஆதலால் தண்ணீர் எடுத்து வருவதென்றால், எந்நாளும் அக்காள் தங்கையரிடையே அக்கப்போர்தான். ஒவ்வொருவரும் “நீ போ,” "நீ போ" என்று அடுத்தவளை ஏவுவார்கள். "சின்னம்மா நீ போய்த் தண்ணீர் கொண்டு வா, என்று பொன்னம்மை

று