உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




200

அப்பாத்துரையம் 40

-

சொன்னாள். "ஏன், நீயே போ," என்றாள் சின்னம்மை. பேச்சுத் தடித்து முற்றிவிட்டது. தன் மக்களின் வழக்கு இடும்புத் தனத்தைப் பார்த்த நல்லம்மை, மனம் நொந்து பெருமூச்சு விட்டாள்.

"கடைசியில் இந்தத் தள்ளாத கிழம்தான் தண்ணீருக்குப் போக வேண்டும் போலும்! இந்த வயதில் நானே தான் அலுப்புத்தட்டாமல் என் பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டியதாயிருக்கிறது. வேறென்ன செய்வது" என்று று நல்லம்மை முனகினாள்.

இவ்வாறு முனகிக்கொண்டே நல்லம்மை தோண்டியை எடுத்துக்கொண்டு குடிசையிலிருந்து புறப்பட்டாள். ஆனால், பத்தடிகூடப் போயிருக்கமாட்டாள். அதற்குள் பக்கத்து வயலில் சிந்தின நெல் பொறுக்கிக் கொண்டிருந்தவர்களுக்குத் துணையாக வேலை செய்து கொண்டிருந்த மீனாள், அவளைப் பார்த்து ஓடோடியும் வந்து, தோண்டியை வாங்கிக்கொண்டு தானே தண்ணீர் கொண்டுவரப் புறப்பட்டாள். நல்லம்மைக்கு மன ஆறுதலும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. “கண்ணே, உன்னை ஆண்டவன் காப்பாற்றுவான்," என்று மனதுக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு குடிசைக்குத் திரும்பினாள்.

கடுகடுப்பும்

அதனால் தமக்கையர் இருவரின் முணுமுணுப்பும் மேலும் பெருகி, அவர்கள் மூலைக்கொருவராக இருந்து அவளை ஏசிப் பேசினார்கள். இடுப்பில் தோண்டியுடன் சென்ற மீனாள் ஒற்றையடித் தடத்தின் வழியாக மலையில் ஏறி, பாறை இடுக்குவழியாக ஊற்றெடுத்துப் பசும்புல் தரையில் பாய்ந்துகொண்டிருந்த மலை அருவியை அடைந்து தண்ணீரை ஏந்திப் பிடித்தாள். நீர் தோண்டியில் நிறைந்து கொண்டிருக்கும் போது தன் முன்னே அரண்மனைக் காவலன்போல் உடை உடுத்தியிருந்த ஒருவன் நிற்பதை அவள் கண்டாள்.

“ஏ, அழகுப் பெண்ணே! ஆரணங்கே, நீ என்னோடு என் அரசன் அரண்மனைக்கு வா. நீ அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விதி முடிந்து போட்டிருக்கிறது,” என்று அந்த ஆள்காரன் மீனாளிடம் கூறினான். அவ்வளவு அன்பாக யாருமே அதுவரை பேசி அறியாத அந்த இளம் பெண்ணும், இரக்கமுள்ள அந்த ஆள்காரன் சொல்லியபடி