உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

203

அவனிடமிருந்து அறிந்துவந்து மீனாளுக்குக் கூறினான். "இதற்கு நீ உடன்பட்டால் உன் வீட்டுக்குப் போய் வரலாம் என்று அரசர் சொல்லியிருக்கிறார்," என்பதாகச் சொல்லி, தங்கப்பணம் நிறைந்த பை ஒன்றையும் அவளிடம் கொடுத்தான். அவள் அதற்கு உடன்பட்டுப் புறப்பட்டாள். மீனாளுடன் ஆள்காரன் மலை அருவி வரையிலும் வந்தான். கோடைகால வெயிலில் மலைப் பாறைகள் எல்லாம் தகதக என்று மின்னிக்கொண்டிருந்தன. தெளிந்த வானத்தில் பறவைகள் இன்பமாகப் பறந்து கொண்டிருந்தன. மலைஅருவி மெல்லோசையுடன் சல சலத்தது. தன் பழைய இடத்துக்கு வந்ததும் மீனாளுக்கும் மகிழ்ச்சி உண்டாய்விட்டது. அவள் அன்பிற்குரிய அம்மையைக் காணலாம் என்ற எண்ணத்தில் அவள் உள்ளம் மகிழ்ச்சியால் துடித்தது.

குடிசையை அடைந்த மீனாள் உள்ளே குதித்தோடி வந்து நல்லம்மையைக் கட்டிக்கொண்டாள். பிறகு பொன்னம்மையை யும் சின்னம்மையையும் தழுவிச் சேர்த்து அளவளாவி மகிழ்ந்தாள்.குடிசையில் அடுப்புக்கு விறகுகூட இல்லாமல் ஓய்ந்து உட்கார்ந்திருந்த மூவரிடமும், தான் கொண்டு வந்திருந்த தங்கப்பணம் நிறைந்த பையைக் கொடுத்து வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்ளுமாறு சொன்னாள். அவளையும், அவள் கணவனையும்பற்றி எல்லா விவரங்களையும் விளக்கமாகத் தெரிவிக்கும்படி எல்லோரும் கேட்டபோது ஆள்காரன் எச்சரிக்கை செய்திருந்தது நினைவுக்கு வந்தது. “நான் நலமே இன்பமாக இருக்கிறேன். அவ்வளவுதான் சொல்லக் கூடும்,” என்று மறுமொழி சொல்லிவிட்டாள். சிறிதுநேரம் அப்படி அளவளாவி இருந்து விட்டு மீனாள் மலை அருவியின் பக்கத்தில் காத்துக் கொண்டிருந்த ஆள்காரன் துணையுடன் மீண்டும் அரண்மனை வந்தடைந்தாள்.

தங்கை மீனாளுக்கு அவ்வளவு வாழ்வு வந்ததைக் கண்டு பொன்னம்மைக்கும், சின்னம்மைக்கும் வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. அந்த நல்வாழ்வு அவளுக்கு எப்படி வந்ததென்பதை அறிந்துவிட வேண்டுமென்று அவர்கள் துடிதுடித்தனர். மீனாள் கணவன் யார் என்பதையும், இருவரும் எங்கே வாழ்கிறார்கள் என்பதையும்பற்றி அவர்களிடம் ஒன்றுமே