உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




204 ||

-

அப்பாத்துரையம் 40

சொல்லாமல் போய்விட்டதால் அவர்களுக்குச் சினம் வேறு வந்தது. பாவம், மீனாளுக்கே விவரம் முற்றிலும் தெரியாதே! தாங்களாக ஒன்றும் தெரிந்துகொள்ள முடியாதபடியால், மலையுச்சியில் வாழ்ந்துவந்த சூனியக்காரக் கிழவியிடம் உளவு கேட்கலாம் என்று துணிந்தனர். அந்தச் சூனியக்காரி பச்சைப் பிள்ளைகளை உயிரோடு தின்று விடும் கொடிய கொலைகாரி என்பது நாடறிந்த செய்தி. கெடுமதி படைத்த சகோதரிகள் கொடுமனம் படைத்த கிழவியை நாடுவது இயல்புதானே.

சு

பொன்னம்மையும்

மஞ்சு தவழும் மலைமுடியில் சின்னம்மையும் ஆர்வத்துடன் ஏறிச்சென்று சூனியக்காரக் கிழவியின் குகைவாயிலை அடைந்தனர். கையைத் தட்டிக் கூப்பிட்டதும் கிழவி வெளியே வந்தாள். சகோதரிகள் இருவரையும் கண்டதும் அவளுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மூர்க்கரை மூர்க்கர் விரும்புவதில் வியப்பென்ன! யாருக்காவது கெடுதல் பண்ணத்தான் அவர்கள் தன் உதவியைநாடி வந்திருப்பார்கள் என்பது அவளுக்குத் தெரியும். பிறருக்குத் துன்பம் செய்வதென்றால் அவளுக்குத்தான் மிக்க விருப்பமாயிற்றே. மூவரும் உள்ளே நுழைந்து, தோலும், கொம்பும், கறுப்புத் துணியும், உடுக்கையும், மண்டை ஓடும் கடை பரத்திக்கிடந்த ஓர் அறைக்குச் சென்றார்கள்.

அவர்கள் தங்கை மீனாளுக்கு வந்த வாழ்வைப் பற்றிப் பொன்னம்மை சூனியக்காரியிடம் தெரிவித்து, அவள் சீரையும் சிறப்பையும் குலைப்பதற்கு ஏதாவது வழிதேட வேண்டுமென்ற அவர்கள் விருப்பத்தையும் அறிவித்தார்கள். கிழவி அவளிட மிருந்த மாயக் கண்ணாடியில் மைப்போட்டுப் பார்த்தாள். மீனாள் தன் சிறப்புமிக்க அரண்மனையில் ஆடை அணிகளுடன் இன்பமாகப் பொழுது போக்குவது கண்ணாடியில் தெரிந்தது. பொன்னம்மையும் சின்னம்மையும் அதைப் பார்த்தனர்.மீனாள் தன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட பிறகு நடந்தவைகளைக் கிழவி தரிந்து சொன்னாள். மீனாள் கணவனுக்குள்ள சாபத்தை எடுத்துக் கூறிச் சகோதரிகளிடம் ஒரு விளக்கைக் கொடுத்தாள். மறுமுறை உங்கள் தங்கை உங்களைக் காண வரும்போது இந்த விளக்கை அவளிடம் கொடுங்கள். அவள் கணவன் தூங்கும் போது இவ்விளக்கை ஏற்றி அவன் முகத்தைப் பார்க்கும்படி

66