உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

(215

கேட்டுத் தெரிந்து கொண்டான்; பூதம் அவளை என்றாவது தின்றுவிடும். ஆகையால், சீக்கிரமாகவே அங்கிருந்து தேன்மொழி தப்பி வெளியேறிவிட வேண்டுமென்று இருவரும் கலந்து பேசி முடிவுக்கு வந்தனர்.

ஆனால் பூதத்தின் கோட்டையிலிருந்து எப்படித் தப்புவது? உறங்கும் போதுகூட அது தன் ஒற்றைவிழியைத் திறந்து கொண்டுதானே தூங்கும். உள்ளே சந்தடி ஏதாவது கேட்டால் உடனே அதற்கு விவரம் தெரிந்து விடுமே "காட்டிற்குப் போய் என் குலதேவதையிடம் இதற்கு ஒரு வழி அறிந்து வருகிறேன்,’’ என்று கூறி இளவரசன் சென்றான். காட்டிலே பெரிய ஆலமரப் பொந்தில் உறையும் ‘ஆனந்தவல்லி' அம்மனைக் கண்டு வணங்கி, அவன் தன் குறையைத் தெரிவித்தான்; “தாயே என் மனதுக்குகந்த மங்கை தேன்மொழி பாதாள வயிரனிடம் சிக்கியிருக்கிறாள். அவளைப் பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு வகை கூற வேண்டும்," என்று கோரினான். அவனிடம் இரக்கம் கொண்ட அத்தேவதையும் தன் மந்திரச் சுவடு ஏடுகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, "அப்பனே நான் உனக்கு ஒரு சிறு கம்பும் நூல் உருண்டையும், ஒரு சீப்பும் தருகிறேன்.பாதாளவயிரன் உன்னைப் பிடித்து விடுவான்போல் தோன்றும்போது முதலில் கம்பைப் போடு! பிறகு நூல் உருண்டையைப் போடு; கடைசியில் சீப்பைப் போடு; ஒவ்வொரு தடவையும் 'ஆனந்தவல்லி, ஆனந்தவல்லி காப்பாற்று' என்று கூறு; எல்லாம் சரிவர நடக்கும்,” என்று சொன்னாள்.

இளவரசன்

புலிமாறன் தன்

குலதேவதையை வணங்கிவிட்டு, அவள் அளித்த மந்திரப் பொருள்களைப் பத்திரமாகத் தன் உள் உடையில் மறைத்துக் கொண்டு ஊர் திரும்பினான். அன்று இரவு நிலா வெள்ளிபோல் ஒளி வீசிற்று. நள்ளிரவில் ஊரெல்லாம் அடங்கியபின் இளவரசன் தேன்மொழியின் பலகணி அருகில் வந்து நின்றான். அவன் வரவை எதிர்பார்த்து நின்ற தேன்மொழி, முன்பு அவளைத் தமக்கையர் இருவரும் தோட்டத்தில் கட்டி இறக்கிய அதே கயிற்றின் உதவியால் இளவரசன் சொல்லியதுபோல் இறங்கிக் கீழே வந்தாள். அவளைத் தன் குதிரை மீதேற்றிக்கொண்டு இளவரசன் மிகு விரைவில் ஊருக்கு வெளியே சென்றான். ஆனால், அதற்குள்,