உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(216) ||— —

அப்பாத்துரையம் 40

-

மாயவல்லமை படைத்த பாதாளவயிரன் அங்கே நடப்பதை எல்லாம் தன் ஒற்றை விழியின் உதவியால், கண்ணாடியில் காண்பதுபோல் சந்திரவட்டத்தில் கண்டு தெரிந்து கொண்டான்.தான் ஆவலோடு தின்பதற்காகக் கொழுக்க வைத்து வந்த தேன்மொழி இப்படித் தன் பிடியினின்றும் தப்பிவிடுவதைக் காணப் பொறாமல் உடனே குதித்தெழுந்து, தன் ஆவேசக் குதிரைமீதேறிக் கொண்டு, பாதாளவயிரன் இளவரசனைத் துரத்தி வந்தான். வாலே இல்லாமல் ஆறு கால்களுடன் இருந்த அந்த ஆவேசக் குதிரை, இளவரசனின் குதிரையைவிடமிக விரைவாக ஓடி அதை நெருங்கிவிட்டது. தனக்குப் பின்னால் குளம்படி ஓசை கேட்ட இளவரசன் திரும்பிப் பார்த்து, பூதம் தன்னை எட்டிப் பிடித்துவிடும் போலிருந்ததை உணர்ந்து, தன்னிடமிருந்த மந்திரக் கம்பைப் பின் பக்கமாக வீசி எறிந்து, “ஆனந்தவல்லி! ஆனந்தவல்லி! காப்பாற்று” என்று வேண்டிக்கொண்டான்.

மந்திரக்கோல் தரையில் விழுந்ததோ இல்லையோ, பூதத்துக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள தூரம் முழுவதிலும் பூமியை மறைத்துக்கொண்டு ஈட்டிமுனைகள் முளைத்தெழுந்தன. ஆள்விழுங்கிப் பூதமும் ஆவேசக் குதிரையும் வேகம் தணிந்து, ஈட்டிமுனைகள் உடலைக் கிழித்து இரத்தம் பொழிய, மெள்ள மெள்ள முன்னேற நேர்ந்தது. இதற்குள் புலிமாறனும் தேன்மொழியும் எத்தனையோ காதவழி போய்விட்டனர்.ஆயினும் என்ன? ஈட்டிமுனைகளைக் கடந்து வந்தபின் பாதாள வயிரனின் ஆறுகால் ஆவேசக் குதிரை முன்னிலும் விரைவாகப் பாய்ந்துவந்து இளவரசன் குதிரையை எட்டிப் பிடிக்கும் அளவுக்கு நெருங்கி வந்துவிட்டது. திரும்பிப் பார்த்த புலிமாறன் நூல் உருண்டையை வீசி எறிந்து, “ஆனந்தவல்லி, ஆனந்தவல்லி காப்பாற்று,” என்று கூறினான்; அவ்வளவில் காதலர் இருவருக்கும் பூதத்துக்கும் இடையே, கரை புரண்டோடும் பெரிய ஆற்றுவெள்ளம் திடீரெனப் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் மேலும் ஆத்திரம் மூண்ட ஆள்விழுங்கிப் பூதம் சற்றும் அஞ்சாமல் ஆவேசக் குதிரையைத் தண்ணீரில் இறக்கி அதைக் கடக்கத் தொடங்கிற்று.வெள்ளத்தின் இழுப்பு வேகமாக இருந்துங்கூடப் பூதம் சிறிது சிறிதாக முன்னேறி மறுகரை சேர்ந்து மீண்டும் இளங்காதலர் களைப் பிடிக்க வந்தது.