உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

(221

வாழ்ந்துவந்த வேலன் என்னும் அழகுமிக்க இளைஞன் அந்தத் தங்கக் கவரிமானைப் பிடிக்கச் சென்றதும், அந்த ஆசையின் காரணமாகத்தான். தங்கக் கவரிமானின் கொம்பை ஒடித்துவந்து, தான் மணம்செய்யக் கருதியிருந்த பூமுடி என்னும் கோமகளுக்குப் பரிசமாகக் கொடுக்க அவன் உள்ளத்தில் எண்ணினான்.

வேலன் அழகில் தலைசிறந்தவனாக இருந்ததோடு, அம்பு எய்வதிலும் பேராற்றல் படைத்தவனாகவும் இருந்தான். அந்நாள் வரையிலும் அவன் இலக்கு வைத்த குறி எதுவும் தப்பினதே இல்லை. அவன் வேட்டைமீது சென்றபோதெல்லாம், “கவரிமான் கண்ணில்பட்டது. ஆனால், தப்பிவிட்டது,” என்ற பேச்சே இருந்தது கிடையாது.

அந்த மண்டிலம் முழுவதிலும் அவனே ‘பெருஞ்செல்வன்,' என்று பெரும்புகழ் பெற்றிருந்த கோமகளின் மகளாக விளங்கிய று பூமுடியும், தன் காதலன் செயற்கரிய அந்த அருஞ்செயலைச் செய்து தனக்குத் தங்கக் கவரிமானின் கொம்பைத் தருவதாகக் கூறியபோது, உள்ளம் பூரித்துப் பெருமிதத்துடன் அவனுக்கு ஊக்கமளித்தாள். நந்திக்கொம்பின் நிதிக்குவியலைக் கொண்டு வந்தபிறகு, வேலனை மணப்பதற்குத் தன் தந்தை கட்டாயம் ஒப்புக்கொள்வார் என்பது அவளுக்குத் தெரியும்.

எனவே, ஒருநாள் அதிகாலையில் வேலன் விழித்தெழுந்ததும் தான் வழிபடும் குன்றக் கடவுளைக் கும்பிட்டுத் தன் முயற்சிக்கு ஊக்கமும் வெற்றியும் அளிக்குமாறு வேண்டிக்கொண்டு, வேட்டையாடப் புறப்பட்டான். திண்மையும் ஆற்றலும் வாய்த்திருந்த தன் வில்லையும், என்றும் குறி பிழைத்திராத தன் கூர் அம்புகளையும் எடுத்துக்கொண்டு பனிமலை முடியை நோக்கிக் கிளம்பினான். வேட்டை முடிந்து திரும்பி வந்ததும், தங்கக்கவரிமான் கொம்பையும், கூளிகளிட மிருந்து கைப்பற்றி வரும் அருநிதியையும் தன் அன்பின் கோயிலான செல்வநங்கை பூமுடியின் காலடியில் வைத்து, அவள் அன்பைப் பெறப்போகும் காட்சியைத் தன் மனக்கண்ணில் கண்ட களிப்புடன் அவன் மிடுக்கான நடை நடந்து சென்றான்.

வைகறைப் புலர்பொழுதில், தாமரை இதழின் நிறத்தைப் பழிக்கும் மேனி அழகுடன் விளங்கிய பனி மலைகள், காலைக்