உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




222

அப்பாத்துரையம் - 40

ம்

கதிரவனின் கதிர்கள் வீசப்பெற்றதும் உருக்கிய பொன்போல் சுடர்விட்டு மிளிர்ந்தன. வேலன் அதிவிரைவாக மேலே மேலே ஏறிக்கொண்டிருந்தான். அடிவாரமும், நடுமலைக்காடும் தாண்டி, குத்துச் செடியும் சிறுபுல்லும், மலைப்பாசியும், கரும்பாறையும், பனித்திடலும் உள்ள உயர்மட்டத்துக்குச் சென்றுவிட்டான். கதிரவனின் பொன்கதிர்கள் பட்டுத் தெறிக்கும் ஒரு பாறைக்கல்லின்மீது நின்று அவன் நெடுகிலும் தன் கண்ணை வீசிக் கவனிக்கும்போது தூரத்தில் தங்கக் கவரிமான் நிற்பதைக் கண்டான். அவன் நிற்கும் இடத்துக்கும், மான் நிற்கும் இடத்துக்கும் பெருந்தொலை இருக்கவில்லை. அதன் தங்கக் கொம்புகள் இளவெயிலில் கண்ணைப் பறிக்கும்படி மின்னிக் கொண்டிருந்தன. அதன் மருண்ட பார்வையில் ஏமாற்றித் திகைக்கவைக்கும் ஒரு கள்ளச் சிரிப்பு கூத்தாடிக் கொண்டிருந்தது. வேலன் தன் வில்லில் அம்பைப் பூட்டிக் குறிப்பார்த்தான். அதுவரையில் பிழையாத அம்பு அன்றும் வெற்றியைத் தரும் என்பதில் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. மான் தன் கையில் சிக்கிக்கொண்டதாகவே அவன் எண்ணினான். ஆனால், கை ஏன் அப்படிப் படபடத்தது. கைக் கூச்சமா? அல்லது மாயமா? எதுவானால் என்ன? விர் என்று கிளம்பிய அம்பு, மானின் மார்பைத் துளைக்கவில்லை. மாயமான் சிறிது காயமுற்றது.

உடனே தொடங்கிவிட்டது உயிர்ப்போராட்டம்.மானின் காயம்பட்ட உடலிலிருந்து சொட்டும் இரத்தத் துளிகள் பாறையிலும், பனிக்கட்டிகளிலும் விழும் இடத்தில் எல்லாம், குபீர் என்று முளைத்துக் கிளைக்கும் செங்கள்ளியின் தீக்கொழுந்து போன்ற பூக்களை, அந்தக் கவரிமான் தின்று வலிமை பெற்று விடுவதற்கு முன்னதாக அதை அடித்து வீழ்த்திவிட வேலன் முடுகி முயன்றான். ஆனால், அந்த மானோ காற்றிலும் கடு விசையுடன் அங்குமிங்கும் பாய்ந்து வேலன் அம்பு வருவதற்குமுன் சற்றே நின்று தனக்கு மேலும் மேலும் உயிர்க்கிளர்ச்சி ஊட்டும் அப்பூக்களைத் தின்றுவிட உன்னி ஓடியது.

என்ன ஊழிவேக ஓட்டப் பந்தயம் அது! இதோ மலையுச்சி; அதோ படுபாதாளம்; இதோ கடுங்கசமான ஏரிக்கரை; அதோ இடிமுழக்குடன் கண்ணுக் கெட்டாத பள்ளத்தில் பாயும் அருவி