உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. பேராசைப் பேயன்

நட்பிற் சிறந்த நான்கு அந்தணர் ஓரூரில் உறைந்திருந் தனர். அவர்களை வறுமை பிடுங்கித் தின்றது. "இப்பொல்லாத வறுமையை போக்கடிக்க ஒரு வழி தேடவேண்டுமே! ஒருவன் வலுவுடையவனாக இருக்கலாம், அழகுடையவனாக இருக் கலாம், பேச்சு வன்மையுடைவனாக இருக்கலாம், கற்றுவல்ல பெரும்புலவனாகவுமிருக்கலாம். அவனுக்குப் பணமின்றேல் இவ்வுலகு என்னத்திற்கு! அவன் நடைபிணத்திற்கு நேரன்றோ! வறுமைப் பிணியால் வருந்தியிருப்பதைக் காட்டிலும் எமனால் பிணிக்கப்பட்டு உயிர்விட்டுப் போய்விடுவதே நலாமன்றோ! ஆகையால், நாமெல்லாம் புறப்பட்டு பொருள்தேடிப் பசிப்பிணியை யொழித்து கொள்வோம்." என்று ஒருவரோ டொருவர் பேசிக்கொண்டு, வேற்று நாடு செல்லப் புறப்பட்டு விட்டனர்.

அந் நால்வரும் பல காவதங்கள் நடந்து ஓருரை யடைந்தனர். அங்கு அவர்கள் சிறிது நேரந் தங்கி, ஆற்றில் குளித்துமுழுகி அருகேயிருந்த ஒரு கோவிலுக்குட் சென்று கடவுளை வணங்கிக்கொண்டு பின்னும் நடக்கலாயினர்.

நடக்கும் வழியில் மாயவித்தையிற் பேர்போன ஒரு மந்திரக்காரனைக் கண்டார்கள். கண்டு வணங்கி அவர்கள் அவனுடன் சென்று ஒரு குகைக்குள் புகுந்தனர். புகுந்ததும் அவன் இந்நால்வரை நோக்கி, “நீங்கள் எந்த ஊர், எங்கே போகின்றீர்கள்? ஏங்கி இளைத்து இவ்வாறு கால்நடையாகப் போவதின் நோக்கம் என்ன?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் மிகத்தொலைவிலிருந்து வருகின்றோம் பணக்காரர் ஆனால் ஆவது; இன்றேல் பிணங்களாகப் போய்விடுவது என்று உறுதி காண்டிருக்கின்றோம். அதற்குத் தக்க ஆசிரியரைத் தேடியலைகின்றோம். உங்களைக் கண்டோம்; மனம்