உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




|--

அப்பாத்துரையம் – 40

(234) || __ விண்டோம்; எங்களை ஈடேற்றி வைப்பது தங்கள் கடன் என்று அம் மந்திரக்காரன் அடிகளில் விழுந்து பணிந்தனர். இவர்கள் வன்மனங்கொண்டவர்கள்; மலைமீதும் ஏறுவார்கள்; குகையினும் புகுவார்கள்; பனிகளையும் வெல்வார்கள்; சுடுகாட்டிலும் மறைவார்கள்; எத்தகைய இடுக்கண்களுக்கும் அஞ்சார்கள்; இவர்கள் மாய மந்திரவித்தைகட்குத் தக்க மாணவர்கள்," என்று எண்ணினான். இவர்களை நோக்கிச் சொல்லுகின்றான்.

“நல்லோர்களே! இதோ, நீங்கள் ஒவ்வொருவரும் ஓரிறகு எடுத்துக்கொள்ளுங்கள். இம்மலைச் சாரலுக்குச் சென்று மேலேறி நடவுங்கள். எவனுடைய இறகு கீழே எங்கு விழுகின்றதோ, அங்கே அவனுக்குப் பொருள் கிடைக்கும். ஆனால், உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன். "ஆசைக்கோ ரளவுண்டு,” என்பதை மறவாதீர்கள். போய்வாருங்கள்” இதனைக் கேட்டுக்கொண்டு மந்திரக்காரனை வணங்கி

நால்வரும் இமயமலைச்சாரலை நோக்கி நடந்தனர்.

அந்

மலைச்சாரலைக் கண்டு, அதன் மீதே நால்வரும் சில மணி நேரம் நடக்க, ஆங்கோர்மேட்டின்மேல் முதலாவதாக ஒருவன் இறந்து விழுந்தது. நால்வருஞ் சேர்ந்து அவ்விடத்தைத் தோண்டினர். தோண்டவே அடி மண்ணெல்லாம் செம்பாக இருக்கக் கண்டனர் கண்டதும் அவ்விறகுடையோன் ஏனை யோனை நோக்கி, “நமக்கு வேண்டுமளவும் செப்புத்தூள்களை மூட்டை டை கட்டிக்கொண்டு பேகலாம்” என்றான். மற்றவர்கள் அவனை நோக்கி "முழுமுட்டாளே! இச்செம்பினால் நமக்கென்ன பயன்! இதனால் நமது வறுமை தீர்ந்துவிடுமா? இவ்விடம் விட்டு இன்னும் ஏறிப்போகலாம்" என்றனர். மந்திரவாதியின் அறிவை மனத்திற்கொண்ட அவன், அவர்களை நோக்கி, “உங்கள் மனம் போல் செய்யலாம்; நான் இனி உங்களுடன் கூடி ஓரடியும் எடுத்து வைக்கமாட்டேன். இச் செப்புத்தூள்களே எனக்குப் போதும்" என்றான். மற்ற மூவரும் இவன் அறிவில்லாதவன் என்று சொல்லிவிட்டு மலையின்மேல் ஏறிப்போனார்கள். செம்பு கண்டவனோ தான் தூக்கக் கூடியவரையில் செப்புத்தூள்களைச் சேகரித்து வாரி, மூட்டை கட்டிக்கொண்டு திரும்பிப் போய்விட்டான். அப்போது