உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. பண்ணன் பண்ணை

குறுங்குடி என்ற ஊரில் பண்ணன் என்ற ஓர் ஏழை அம்பட்டன் இருந்தான். அவன் சிறு பிள்ளைப் பருவமுதலே மிகவும் சோம்பேறியாக இருந்தான். ஆனாலும் அவன் அழகிற் சிறந்தவன். நுண்ணறிவுடையவன். யாரையாவது உருட்டிப் பசப்பி வாழப் படித்திருந்தான்.

அவன் பசப்புக்களுக்கு ஆளாகி, ஒரு பெண் அவனை மணந்துகொள்ள இணங்கினாள். அவள் பெயர் பைந்தொடி. அவள் பெற்றோரும் உறவினரும்கூட அவன் நயநாகரிகப் போக்கில் ஈடுபட்டிருந்தார்கள்.ஆகவே, அவளை அவன் மணந்து கொள்ள இசைந்தார்கள். பண்ணன் பைந்தொடி

யுடன் தனிக்குடித்தனம் தொடங்கி நடத்தலானான்.

பண்ணன் நாடோடி வாழ்வுடன் அவன் பெற்றோர் வாழ்வு எப்படியோ ஒத்துக்கொண்டது. ஏனென்றால், அவன் தந்தை உழைத்து வீட்டுக்கு வேண்டியவற்றைச் செய்து தந்தார். ஆனால், அவன் மணமான சில நாட்களுக்குள் தந்தை காலமானார்.

பண்ணன் ஊர் சுற்றி எப்படியோ தன் வயிறு கழுவி னான். அவன் மனைவி படிப்படியாகக் கால்பட்டினி, அரைப்பட்டினியாக அவதிப்பட்டாள். மாமியிடமிருந்தும் அவள் எந்த உதவியும் எதிர்பார்க்க முடியவில்லை. னனில், அவளும் உணவுக்கும், உடைக்கும் ஆலாப் பறக்கலானாள்.

உழைத்து ஏதாவது பணம் திரட்டும்படி தாயும், மனைவியும் எவ்வளவோ சால்லிப்பார்த்தார்கள். பண்ணனுக்குப் பொறுப்புணர்ச்சியும் வரவில்லை. அவர்கள் துன்பங்கண்டு இரக்கங்கூட உண்டாகவில்லை. “என்னால் உழைக்கமுடிவில்லை. வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்?