உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(258

அப்பாத்துரையம் – 40

வேறு எந்த ஊருக்குப் போனாலும் நிலைமை மாறாது. இந்த ஊர் பழகிவிட்டதுபோல, அந்த ஊர் பழக்கப்பட்டதாயிராது”

என்றான்.

"தன் ஊரில் தன் வயிறு கழுவ முடியும் வரை, அடுத்த வர்களைப் பற்றி அவன் கவலைப்படப் போவதில்லை” என்று தாயும் மனைவியும் கண்டார்கள். அவர்கள் தங்கள் தங்களாலான ஊழிய வேலைகளைச் செய்யத் துணிந்தார்கள். அப்படியும் அவர்கள் நல்வாழ்வு வாழமுடியவில்லை. அரும்பாடு பட்டும் அவல வாழ்வு வாழ்ந்தனர். அந்த வாழ்விலுங்கூடப் பண்ணன் நாணமில்லாமல் அவர்களைப் பசப்பி அவர்களிடமிருந்து ஒன்றிரண்டு காசு கைப்பற்றி வந்தான்.

தான்

தன்

கணவன் மானமற்றப் போக்கு பைந்தொடியின் உள்ளத்தைச் சுட்டது. ஒரு நாள் அவள் மனம் விட்டுப் பேசினாள். "அன்பரே, பெண்களுக்குக் “கணவன் கல்லானாலும் காவலன், புல்லானாலும் பூமான்" என்பார்கள். நீங்கள் என்ன செய்தாலும், எப்படி இருந்தாலும் என் உள்ளத்தில் உங்களுக்குக் கட்டாயம் இடமிருக்கும். ஆனால், ஊரார் உங்களைப்பற்றி எண்ணுவதும் பேசுவதும் கேட்க எனக்கு மானம் பிடுங்கித் தின்கிறது. கணவனைப் பறிகொடுத்த கைம்பெண்கள் கைவேலையால் அவலவாழ்வு வாழ்வார்கள். அப்போதுகூடத் தங்களுக்கு ஒரு பிள்ளை இருந்தால் அந்த நிலைக்குஅவர்களைப் பிள்ளைகள் விடமாட்டார்கள். ஆனால், நீங்கள் உங்கள் தாய்க்குப் பிள்ளையாயிருந்தும் தாயை ஊரில் அலையவிடு கிறீர்கள். நீங்கள் உயிருடனிருக்கும் போதே என்னைக் கைம்பெண் போல வாழும்படி செய்து வருகிறீர்கள். இதைக்கண்டு நையாண்டி செய்பவர்களிடமே நீங்கள் சென்று பசப்பி ஒட்டி வாழ்கிறீர்கள். நீங்கள் தை அறியாமல் வாழமுடிகிறது. என்னால் இதைத் தாங்கிக் கொண்டு நெடுநாள் வாழமுடியாது. மானத்துடன் வாழ முடியவில்லையானால், நான் உயிரையாவது விட்டுவிடவேண்டும். நான் கைம்பெண்ணாக இருப்பதைவிட, நீங்கள் மனைவியற்றவராக இரப்பதுதான் உங்கள் போக்குக்குப் பொருத்தமும், மதிப்பும் ஆகும்" என்றாள்.

பண்ணன் சோம்பேறி மட்டும்தான். மானமற்றவன் அல்லன். மனைவியின் சொற்கள் மிகையுரைகளல்ல, மெய்ம்