உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வியப்பூட்டும் சிறுகதைகள்

265

தருவிக்கிறேன். என் மீது இரங்கி என்னை விட்டவிட வேண்டும்” என்றது.

“சரி, முன்னிரவில் பொன் வராவிட்டாலும் சரி, விடியற் காலம் பத்தாயவேலை முடியாவிட்டாலும் சரி, நான் உன் நாட்டுக்கே கிளம்பிவிடுவேன் என்று கூறி பண்ணன் பூதத்துக்கு விடைகொடுத்து அனுப்பினான்.

அன்று மாலையே பத்தாயிரம் பொன் கிழி பல கணிக்குள் வந்து விழுந்தது. பண்ணன் அதை ஏற்கெனவே திர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆகவே, அதை எடுத்துப் பாதுகாப்பாக வைத்தான். இரவிலும் அவன் கண்ணாடி யின் மூலம் பத்தாய வேலையைக் கவனித்தான். விடிவதற்குள் பத்தாயம் முற்றுப்பெற்றதுடன் அது நிறைய அரிசியும் பொங்கி வழிந்தது.

பண்ணன் வாக்களித்தபடி மழிப்புக் கத்திக்கு ஒரு கோயில் கட்டினான். அதன் முன் கூடம் மிகப் பெரிதாயிருந்தது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான அம்பட்டர்களை வரவழைத்த அவன் விருந்து நடத்தினான். அதனையடுத்து அம்பட்ட மாநாடு ஒன்றும் நடத்தி, அச்சமூகத்தினர் வாழ்வை வளப்படுத்துவதற்கான திட்டம் வகுத்தான்.