உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. கோவேந்தன்

முக்காணிகள் தமிழகத்தின் மிகப் பழங்குடிகள். மூவரசரும் அவர்களுக்குக் காணி அளித்திருந்தனர். அதனாலேயே அவர்கள் முக்காணிகள் என்று அழைக்கப்பட்டனர். முருகன் படை வீடுகளின் கோயிலுரிமை அவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. அந்த உரிமையை அவர்கள் குடியின் ஆண்கள் வழிவழியாக ஆண்டுவந்தனர். ஆயினும் அதன் மரபு ஆண்மரபாக இல்லை. பழைய தாய் மரபாகிய பெண்மரபாகவே இருந்தது.

ஒவ்வோர் ஆடவன் ஆட்சியுரிமையும் அவனிடமிருந்து அவன் உடன் பிறந்தாள் பிள்ளைக்கே சென்றது. இதனால் முக்காணிப் பெண்களின் மதிப்பு, பன்மடங்கு உயர்ந்தது. எந்த இளைஞனும் முக்காணிப் பெண்களின் தாய் தந்தையருக்குப் பெரும்பொருள் கொடுத்தாலல்லாமல் அவர்கள் கைப் பிடிக்கும் உரிமையைப் பெற முடியாதிருந்தது.

மானூர் என்ற சிற்றூரில் நொடிந்துப் போன ஒரு முக்காணிக் குடும்பம் இருந்தது. அதில் கோமாறன் என்ற ஓர் இளைஞன் இருந்தான். அவன் தந்தை இளமையிலேயே அவனை விட்டு உலகு நீத்தார். வறுமையின் சூழலிலே அவன் தாய் பூமாரி அவனை வளர்த்து வந்தாள். வாழ்வுக்கே அவர்கள் நிலை தடுமாற்றமாய் இருந்தது. இந் நிலையில் திருமணம் எட்டாக் கனியாய் அமைந்தது. தாய் இதுபற்றி மிகவும் கவலைப்பட்டாள். ஆனால், கோமாறன் அவளைத் தேற்றினான். தானே தன் முயற்சியால் மணம் புரிந்து கொள்வதாக அவன் உறுதி கூறினான்.

மானூர் செந்தில்மாநகரின் அருகிலேயே இருந்தது. செந்தில்மாநகரில் முக்காணிச் செல்வர் பலர் வாழ்ந்து வந்தார்கள், கோமாறன் அவர்களை அணுகினான். செல்வர் இரங்கிச் சிறுசிறு தொகை அளித்தார்கள். ஆனால், செல்வப் பெண்டிரே மிகுதியும் பரிவு கொண்டனர். அந்த ஏழை ளைஞனுக்கு